\\*பலவீனமான ஹதீஸ்களை அறிந்து கொள்வோம்….*\\
*உளூ இல்லாமல் பாங்கு சொல்லக்கூடாது?*
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ يَحْيَى الصَّدَفِيِّ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُؤَذِّنُ إِلَّا مُتَوَضِّئٌ رواه الترمذي
*உளூ உள்ளவரைத் தவிர மற்றவர்கள் பாங்கு சொல்லக்கூடாது* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : திர்மிதீ (184)
இதே கருத்து பைஹகியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு செய்தியிலும் நபிகளார் தொடர்புடையதாக வரும் செய்தி பலவீனமானது என்பதை அந்த செய்தியை பதிவு செய்தவர்களில் ஒருவரான இமாம் பைஹகீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
*உளூ இல்லாமல் பாங்கு சொல்லக்கூடாது* என்று நபிகளார் கூறியதாக இடம் பெறும் செய்தியில் *முஆவியா பின் யஹ்யா அஸ்ஸதஃபீ என்ற பலவீனமான* அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பற்றி, அழிபவர், எந்த மதிப்பும் இல்லாதவர் என்று யஹ்யா பின் மயீன் அவர்கள் கூறியுள்ளார்கள்.
*இவர் ஹதீஸ்துறையில் பலவீனமானவர் என்று அல்ஜவ்ஸஜானீ அவர்களும் நம்பகமானவர் இல்லை என்று அபூஸுர்ஆ அவர்களும் கூறியுள்ளார்கள்.*
இவர் பலவீனமானவர், *இவருடைய ஹதீஸில் மறுக்கப்பட வேண்டியவை உள்ளன* என்று அபூஹாத்திம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இவரை (பொய்யர் என்பதால்) நாங்கள் விட்டுவிட்டோம் என்று அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் :10, பக்கம் : 197