Latest Post

ஒரு பெண்ணுடைய மூன்று குழந்தைகள் இறந்து விட்டால் ‎அக்குழந்தைகள் அவரை நரகத்திலிருந்து காக்கும் தடையாக ‎அமைவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி இரண்டு குழந்தைகள்? ‎என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎இரண்டு குழந்தைகளும் தான் என்று விடையளித்தார்கள்.‎ உங்களில் மரணத் தருவாயில் உள்ளவர்களுக்கு லாயிலாஹ ‎இல்லல்லாஹ் என்று சொல்லிக் கொடுங்கள் என்று நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎ எந்த ஒரு முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டு, அம்மரத்திலிருந்து ‎மனிதர்களோ, மற்ற விலங்கினங்களோ சாப்பிட்டால் அது அவர் ‎செய்யும் தர்மமாகக் கருதப்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்படும் போது ‎‎(முஅவ்விதாத் எனப்படும்) கடைசி மூன்று அத்தியாயங்களை ‎ஓதி தமது கையால் தடவிக் கொள்வது வழக்கம். அவர்கள் எந்த ‎நோயில் மரணித்தார்களோ அந்த நோயின் போது கடைசி மூன்று ‎அத்தியாயங்களை நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் ‎அல்லாஹும்ம ஃபிர்லீ வர்ஹம்னீ வஅல்ஹிக்னீ பிர்ரஃபீக் என்று ‎கூறியதை நான் காது கொடுத்துக் கேட்டேன்.‎

முகப்பு

Download

 உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் அந்த ஏக இறைவனின் கருணையும் அபிவிருத்தியும் என்றென்றும் உண்டாவட்டுமாக…

Whatsapp  download செய்து கீழே தரப்பட்டுள்ள link யை click செய்து இணைந்து கொள்ளுங்கள் 

https://chat.whatsapp.com/H3iR0y0qz4V6fdQFbaCOuA

https://www.youtube.com/channel/UC2KMipotsMbFQSLMAiq4htA

குர்ஆன் என்னும் பெயர் வானவர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம், நபியவர்களுக்கு வல்லவன் அருளிய இந்த நன்மறைக்கு எத்தனையோ பெயர்கள் இருந்த போதிலும், இந்த மாமறையிலே பல இடங்களிலும்  குறிப்பிடப்படும் “குர்ஆன்” என்ற பெயரே சிறப்பு பெயராக விளங்கி வருகிறது

குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”, “ஓதக்கூடியது”,  ஓதவேண்டியது என்று பொருள்படும். அண்ணல் நபி அவர்களுக்கு ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக “ஓதப்பட்ட” இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி “ஓதவேண்டியது” என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் “ஓதப்படுவதும்” சிந்தித்து நயக்கத்தக்கதாக இருக்கிறது.

திருக் குர்ஆனிலே திருக் குர்ஆனைக் குறிக்கும் பெயர்கள் பலவற்றைத் தனியே ஒரு பக்கத்தில் தந்துள்ளோம்.
அருளப்பெற்ற நாள் நபிகள் பெருமானார் அவர்களுடைய நாற்பதாவது வயதிலே, ரமளான் மாதத்தின் பிந்திய இரவுகளில் ஓர் இரவன்று, மக்கமா நகருக்கு அருகிலுள்ள ஹிராக் குகையிலே தனித்திருந்து, இறைவனைச் சிந்தித்திருந்த நேரத்தில் தான் திருக் குர்ஆன் முதன் முதலாக அருளப் பெற்றது. அந்த இரவு தான் “லைலத்துல் கத்ர்” (கண்ணியமிக்க இரவு) என்று அறியப்படுகிறது.

மாண்புமிக்க அந்த இரவிலே முதன் முதலாக அருளப் பெறத்துவங்கிய இந்த வான்மறை, அந்தந்தக் காலத்தின் நிலைமைக்கும் அவசியத்திற்கும் தக்கவாறு, – பெருமானார் வாழ்ந்த பிந்திய 23-வருடங்களில்- கொஞ்சங் கொஞ்சமாக அருளப்பெற்று பூர்த்தி பெற்றது.

இவ்வாறு அந்த 23-ஆண்டுகளில் இறைவனால் அறிவிக்கப்பட்டதே திருக் குர்ஆன்.
குர்ஆனின் அமைப்புதிருக்குர்ஆன் 3 வசனங்கள் முதல் 286 வசனங்கள் வரையிலுமுள்ள, சிறிய, பெரிய 114 அத்தியாயங்களாக அமைக்கப்பட்டுள்ளது.

திருக் குர்ஆனில் உள்ள வசனங்களும், அத்தியாயங்களும் இப்பொழுதுள்ள வரிசைக்கிரமப்படி அருளப் பெறவில்லை.

கால நிலைமைக்கும், மக்களின் தேவைக்கும் அவசியமான அளவு சிறிது, சிறிதாக அத்தியாயங்களாகவும், வசனங்களாகவும், அருளப் பெற்று வந்தன. இவ்வாறு அருளப் பெற்று வரும் காலத்தில், நபி பெருமானார்களுக்கு, இறைவன் கற்பித்ததற்கிணங்க, இன்னின்ன வசனங்கள், இன்னின்ன அத்தியாயங்களை சேர்ந்தவையெனவும், அதிலும் குறிப்பிட்ட வசனம், குறிப்பிட்ட அத்தியாயத்தில் எத்தனையாவது வசனம் எனவும் அறிவித்து வந்தார்கள். அந்த ஒழுங்கு முறைப்படி அமைக்கப் பெற்றது தான், இக்காலத்தில் நம்மிடத்தில் இருக்கும் திருக் குர்ஆன்.

இந்த அமைப்பு முறைக்கு, “தௌகீஃபீ” (அறிவிப்புப்படி அமைக்கப் பெற்றது) என்றும், தர்தீபே திலாவதி” (ஓதக்கூடிய வரிசை) என்றும், “தர்தீபே ரஸுலி (ரஸுலுடைய வரிசை) என்றும் கூறப்பெறுகின்றது.

தவிர, திருக் குர்ஆனின் வசனங்களும், அத்தியாங்களும் அருளப் பெற்ற முறைக்குத் “தர்தீபே நுஜுலி” (அருளப் பெற்ற வரிசை) என்று கூறப்பெறுகின்றது.

கீழ்க்காணும் தலைப்புக்களில் குர்ஆன் வசனங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

ஒரே இறைவன் தான் இருக்கிறான்

ஒரே இறைவன் தான் இருக்க முடியும்

தொன்று தொட்டு வரும் ஓரிறைக் கொள்கை

இறைவனுக்கு இணையாக எவரும் இல்லை

ஆட்சியில் இறைவனுக்கு இணை இல்லை

படைத்தல் அல்லாஹ்வின் அதிகாரம்

காத்தல் அல்லாஹ்வின் அதிகாரம்

அழித்தல் அல்லாஹ்வின் அதிகாரம்

அறிவை வழங்குவது அல்லாஹ்வின் அதிகாரம்

குழந்தையைத் தருவது அல்லாஹ்வின் அதிகாரம்

ஆட்சி அல்லாஹ்வின் அதிகாரம்

செல்வம் அல்லாஹ்வின் அதிகாரம்

மழை அல்லாஹ்வின் அதிகாரம்

நோய் நிவாரணம் அல்லாஹ்வின் அதிகாரம்

காத்தல் அல்லாஹ்வின் அதிகாரம்

அழித்தல் அல்லாஹ்வின் அதிகாரம்

அறிவை வழங்குவது அல்லாஹ்வின் அதிகாரம்

குழந்தையைத் தருவது அல்லாஹ்வின் அதிகாரம்

ஆட்சி அல்லாஹ்வின் அதிகாரம்

செல்வம் அல்லாஹ்வின் அதிகாரம்

மழை அல்லாஹ்வின் அதிகாரம்

நோய் நிவாரணம் அல்லாஹ்வின் அதிகாரம்

கால் நடைகளைக் கடவுளாக்கக் கூடாது

வானவர்களை வணங்கக் கூடாது

சிலைகளை வணங்கக் கூடாது

மகான்களை வணங்கக் கூடாது

இறந்தவரைப் பிரார்த்திக்கக் கூடாது

மரணித்தவர்கள் எதையும் அறிய முடியாது

நபிமார்களும் மனிதர்கள் தாம்

நபிமார்கள் உணவு உட்கொண்டனர்

நபிமார்கள் மனைவியருடன் குடும்பம் நடத்தினர்

நபிமார்கள் பிள்ளைகள் பெற்றனர்

நபிமார்கள் மரணித்தனர்

நபிமார்கள் கவலைப்பட்டனர்

நபிமார்கள் கொல்லப்பட்டனர்

நபிமார்கள் நோய் நொடிக்கு ஆளானார்கள்

நபிமார்களும் மறுமையில் விசாரிக்கப்படுவார்கள்

நபிமார்கள் மறுமையில் கை விடுவார்கள்

தவறு செய்தால் நபிமார்களும் தப்ப முடியாது

நன்மையோ, தீமையோ செய்ய நபிமார்களுக்கு இயலாது

நபிமார்களையும் அல்லாஹ் தான் மன்னிக்க முடியும்

நபிமார்களும் இறைவனின் அடிமைகளே

நபிகள் நாயகம் அல்லாஹ்வின் அடிமை

அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் நபிகள் நாயகத்திடம் இல்லை

நேர் வழியில் சேர்ப்பது நபிகள் நாயகத்தின் அதிகாரத்தில் இல்லை

நபிகள் நாயகமும் மனிதரே

நபிமார்களின் அற்புதங்கள்

அற்புதங்கள் அல்லாஹ் நாடினால் மட்டுமே

கெட்டவர்க்கும் அற்புதம்

மறைவானவை அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்

மறைவானவை நபிமார்களுக்குத் தெரியாது

மறைவானவை நபிகள் நாயகத்துக்குத் தெரியாது

நபிமார்களுக்கு சிலவற்றை மட்டும் அல்லாஹ் அறிவிப்பான்

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் பெரும் பாவம்

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க எந்த நியாயமும் இல்லை

இறைவனை யாரும் கண்டதில்லை; காண முடியாது

மறுமையில் இறைவனைக் காண முடியும்

இறைவனின் இலக்கணம்

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

[அல்குர்ஆன் 112:1]

 

முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதில் கீழ்க்காணும் எட்டு அமசங்கள் அடங்கியுள்ளன.

முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்று நம்புவதற்கு ஏற்ற வகையில் அமைந்த அவர்களின் தூய வாழ்க்கை.

முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்களுக்குக் கடவுள் தன்மை இல்லை.

முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்கள் மார்க்கம் தொடர்பாகக் காட்டிய வழிகாட்டுதல் அனைத்தும் அவர்களுடைய சொந்தக் கருத்தல்ல; அல்லாஹ்விடமிருந்து வந்தவையே!

முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்கள் காட்டாமல் அவர்களுக்குப் பின்னர் மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட அனைத்தும் வழிகேடாகும்.

முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்களின் வழிகாட்டுதல் திருக்குர்ஆனுக்கு அடுத்து ஏற்று நடக்கத்தக்கதாகும்

அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்கள் வழியாக மட்டுமே இறைச்செய்தி நமக்குக் கிடைத்தது. அவர்களைத் தவிர யாராக இருந்தாலும், நபிதோழர்களாக இருந்தாலும் மாபெரும் இமாம்களானாலும், தவசீலர்களாக இருந்தாலும் வஹீ எனும் இறைச் செய்தி வராது. அவர்கள் கூறுவது மார்க்க ஆதாரம் அல்ல.

முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்கள் திருக்குர்ஆனுக்கு மாற்றமாக ஒரு செய்தியையும் சொல்ல மாட்டார்கள். அப்படி அவர்கள் பெய்ரால் சொல்லப்படும் செய்திகளுக்கும் அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை

முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்கள் இறைத்தூதர் என்ற அடிப்படையில் இல்லாமல் தனிப்பட்ட முறையில் கூறிய சொந்தக் கருத்துக்கள் மார்க்கமாகாது.

முஹம்மது நபி ஸல் அவர்கள் பற்றி …

▪︎ தாயின் வயிற்றில் இருக்கும்போதே தந்தையை இழந்தவர்.

▪︎ தனது ஆறு வயதில் தாயை இழந்தவர், முழு அனாதையாக வளர்ந்தவர்.

▪︎ உறவினர்களின் ஆதரவில் வளர்ந்தவர், நற்குணமிக்க சிறுவர்.

▪︎ தீய குணங்களில் இருந்து பாதுகாக்கப்பட்ட இளைஞர்.

▪︎ ஆடுகளை மேய்த்தவர், அமானிதங்களை பாதுகாத்தவர்.

▪︎ சமாதான புருஷர், நல்லிணக்க நாயகர்.

▪︎ நேர்மையான வியாபாரி, வாக்கு நாணயம் மிக்கவர்.

▪︎ தொழிலாளியாக பணிபுரிந்தவர், விதவையை முதலாவதாக திருமணம் செய்தவர்.

▪︎ பிரபஞ்சத்தை சிந்தித்துப் பார்த்தவர்.

▪︎ படைத்தவனை தேடி தியானித்தவர்.

▪︎ படைத்தவனின் அருளைப் பெற்றவர்.

▪︎ இறைத் தூதுத்துவத்தை பெற்றவர்.

▪︎ மனிதர்களைப் பற்றி கவலைப்பட்டவர்.

▪︎ இறைவனுக்கு இணை வைப்பதை வெறுத்தவர்.

▪︎ மக்களுக்கு விடுதலை பெற்று கொடுத்தவர்.

▪︎ சிலை வழிபாட்டை வெறுத்தவர், படைத்தவனின் பால் மக்களை அழைத்தவர்.

▪︎ சொர்க்கத்தைக் கொண்டு மக்களுக்கு நற்செய்தி கூறியவர்.

▪︎ நரகத்தை விட்டும் எச்சரித்தவர்.

▪︎ சத்தியப்பாதையில் துணிவு மிக்கவர்.

▪︎ துன்பங்கள் துயரங்களை தாங்கியவர்.

▪︎ கல்லால் அடிவாங்கியவர், வசை பேச்சுகளுக்கு ஆளானவர்.

▪︎ எதையும் தாங்கும் இதயம் உடையவர்.

▪︎ நற்குணத்தின் தாயகமானவர்.

▪︎ சத்தியத்திற்காக நாடு துறந்தவர்.

▪︎ உற்றாரால் புறக்கணிக்கப்பட்டவர், சகிப்புத் தன்மைக்கு பெயர் போனவர்.

▪︎ அர்ப்பணிப்புக்கு எடுத்துக்காட்டானவர்.

▪︎ போர்க்களங்களை சந்தித்தவர், இழப்புகளை தாங்கிக் கொண்டவர்.

▪︎ தியாகிகளை உருவாக்கியவர், மாபெரும் புரட்சியாளர்.

▪︎ மாவீரர், மடமையை அகற்றியவர்.

▪︎ அறிவுக் கண்களைத் திறந்தவர்.

▪︎ சிறந்த வழிகாட்டி, படைத்தளபதி.

▪︎ தன்னை படைத்தவனின் அடிமை என பெருமை அடைந்தவர்.

▪︎ இலட்சியத்தை நிறைவேற்றியவர்.

▪︎ சிற்றின்ப வாழ்க்கையை வெறுத்தவர்.

▪︎ பேரின்ப வாழ்க்கைக்காக பாடுபட்டவர்.

▪︎ உயிரைக் கொடுக்கும் தோழர்களை உருவாக்கியவர்.

▪︎ அடிமைத்தனத்தை ஒழித்தவர், நிறவெறியை மாய்த்தவர்.

▪︎ மொழி வெறியை போக்கியவர்.

▪︎ மனிதநேயத்தை நிலைநாட்டியவர்.

▪︎ தன்னை பின்பற்ற அழைத்தவர், தன்னை வரம்பு மீறி புகழ்வதை தடுத்தவர்.

▪︎ தான் ஓர் இறை அடிமை என முழங்கியவர்.

▪︎ எனக்கு சிலையோ சமாதியோ கட்டக் கூடாது என்றவர்.

▪︎ விதவைக்கு வாழ்வு அளித்தவர்.

▪︎ ஆதரவற்றவர்களுக்கு உதவியவர்.

▪︎ இரக்க குணம் கொண்டவர்.

▪︎ மாபெரும் பேரரசை உருவாக்கியவர், உலகம் போற்றும் உத்தமர்.

▪︎ அனைத்து தலைவர்களாளும் பாராட்டப்படக் கூடியவர்.

▪︎ எதிரிகளாலும் மதிக்கப்பட்டவர்.

▪︎ எந்நேரமும் ஒலிக்கப்படும் நாமம் உடையவர்.

▪︎ 200 கோடி மக்களின் இதயங்களில் இடம் பிடித்தவர்.
200 கோடி மக்களால் பின்பற்றப்படக்கூடியவர்.

▪︎ இறையருளைப் பெறுவதையே இலட்சியமாகக் கொண்டவர்.

▪︎ ஒற்றுமையை வலியுறுத்தியவர், மனித சகோதரத்துவத்தை பேணியவர்.

▪︎ மாற்றாரையும் மதித்தவர், ஜீவராசிகள் மீது இரக்கம் கொண்டவர் நியாயத்திற்கு துணை நின்றவர், அநியாயத்தை எதிர்த்தவர்.

▪︎ படைத்தவன் திருப்திக்காக உற்றாரை பகைத்தவர்.

▪︎ ஓர் இறைக்கோட்பாட்டை உரக்கச் சொன்னவர்.

▪︎ புகழுக்குரியவர் என்ற பெயருடையவர்.

இவர்தான் முஹம்மது (அகிலத்தின் அருட்கொடை) புத்தகத்திலிருந்து…

You missed