Month: July 2022

Fasting the day of Ashura
முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்.
وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ
أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِى قَبْلَهُ
It was narrated from Abu Qatadah
that the Messenger of Allah (ﷺ) said:
Fasting the day of ‘Ashura’, I hope,
will expiate for the sins of the
previous year.
Sunan Ibn Majah 1738

நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களில் ரஹீம்களாக (இரக்கம் மிகுந்தவர்களாக) உள்ளவர்களுக்கே அருள் புரிகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ سَعْدُ
بْنُ عُبَادَةَ أَتَبْكِي فَقَالَ ‏”‏
إِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ ‏”‏‏.
The Prophet (ﷺ) said, Allah is merciful
only to those of His slaves who are
merciful (to others).
Narrated Usama:Sahih al-Bukhari 7448

அல்லாஹ்வின் திருப்பெயரை மற்றவர்களுக்குச் சூட்டலாமா?

அல்லாஹ்வின் திருப்பெயரை மற்றவர்களுக்குச் சூட்டலாமா? ரஹீம்’ என்ற திருப்பெயரும் அல்லாஹ்விற்குரிய பெயரேயாகும். ஆனால் ரஹீம் என்ற இந்தச் சொல் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கும் சில சமயங்களில் பயன்படுத்தப்படுவதுண்டு. திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இதற்குச் சான்றுகள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்…

ஒருவர் செய்த பாவத்திற்காக இன்னொருவர் தண்டிக்கப்பட மாட்டார்

ஒருவர் செய்த பாவத்திற்காக இன்னொருவர் தண்டிக்கப்பட மாட்டார் என்று திருக்குர் ஆன் தெளிவாக எடுத்துரைக்கின்றது இந்த விவகாரத்தில் இஸ்லாத்தில் எந்த சமரசமும் இல்லை. قُلْ اَغَيْرَ اللّٰهِ اَبْغِىْ رَبًّا وَّهُوَ رَبُّ كُلِّ شَىْءٍ‌ ؕ وَلَا تَكْسِبُ كُلُّ…

அல்லாஹ்வின் பெயர்களை மனிதர்களுக்கு வைக்கலாமா?

*அல்லாஹ்வின் பெயர்களை மனிதர்களுக்கு வைக்கலாமா?* அல்லாஹ்வுடைய பெயர்களில் மனிதர்களுக்கும் வைக்க முடியுமான பெயர்களும் உண்டு. அந்தப் பெயர்களில் அல்லாஹ் படைப்பினங்களுக்கு ஒப்பாகாத வகையில் அவனுக்கே உரிய தகுதியில் இருக்கிறான். ரஹீம்–இரக்கமுள்ளவன் (முஃமின்களுடன் அவர் இரக்கமுள்ளவராக இருப்பார் என்று நபியவர்களைப் பார்த்து அல்லாஹ்…

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவருடைய நாவிலிருந்தும் கரத்தில் இருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (முஸ்லிம்களில் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள்.
قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَىُّ الإِسْلاَمِ أَفْضَلُ قَالَ
‏ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ
Narrated Abu Musa: Some people asked Allah’s Messenger (ﷺ), “Whose Islam is the best? i.e. (Who is a very good Muslim)?” He replied, “One who avoids harming the Muslims with his tongue and hands
Sahih al-Bukhari 11

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும்.
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ ۖ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي
And when My servants ask you about Me, I Am near; I answer the call of the caller when he calls on Me. So let them answer Me, and have faith in Me
Al-Baqarah, Ayah 186

அனைத்தும் உயிர்களும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் தான் !

அனைத்தும் உயிர்களும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் தான் ! கைப்பற்றப்பட்ட மனிதனின் உயிர்களைத் தனது கட்டுப்பாட்டில் இறைவன் வைத்திருப்பதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது…

ஆன்மாக்களின் உலகம் எது?

ஆன்மாக்களின் உலகம் எது? மனிதன் மரணித்து விட்டால் அவனது செயல்பாடுகள் முடிந்து விடுகின்றன. மரணித்தவனால் சிந்திக்கவும், செயல்படவும் முடியாது என்பதைக் கண்கூடாக நாம் காண்பதால் இதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. அதனால் தான் இறந்தவரை நாம் அடக்கம் செய்கிறோம். அவரது…

அவர்களைப் பல வருடங்கள் நாம் சுகம் அனுபவிக்கச் செய்து, பின்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டது அவர்களிடம் வருமானால் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தவை அவர்களைக் காப்பாற்றாது என்பதை அறிவீரா?
أَفَرَأَيْتَ إِنْ مَتَّعْنَاهُمْ سِنِينَ ثُمَّ جَاءَهُمْ مَا كَانُوا يُوعَدُونَ مَا أَغْنَىٰ عَنْهُمْ مَا كَانُوا يُمَتَّعُونَ
Have you considered: if We let them enjoy themselves for some years Then there comes to them what they were promised. Of what avail to them will be their past enjoyments?
26.Surah Ash Shu’ara 205~207

34:30. உங்களுக்கென வாக்களிக்கப்பட்ட நாள் ஒன்று உள்ளது. அதை விட்டு சிறிது நேரம் பிந்தவும் மாட்டீர்கள். முந்தவும் மாட்டீர்கள்‘ என்று கூறுவீராக!
قُلْ لَّـكُمْ مِّيْعَادُ يَوْمٍ لَّا تَسْتَاْخِرُوْنَ عَنْهُ سَاعَةً وَّلَا تَسْتَقْدِمُوْنَ
Say, “You are promised a Day, which you cannot postpone by one hour, nor bring forward.
4:78. நீங்கள் எங்கே இருந்தபோதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே
أَيْنَمَا تَكُونُوا يُدْرِكْكُمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ
Wherever you may be, death will catch up with you, even if you were in fortified towers.

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————— *மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! * وَيَسْأَلُونَكَ عَنِ…

கடன் குறித்து இஸ்லாம் கூறும் நிலைபாடு என்ன?

*கடன் குறித்து இஸ்லாம் கூறும் நிலைபாடு என்ன?* *கடன் விஷயத்தில் கண்டிப்பு காட்டிய நபிகளார்* கடன் வாங்குவது, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றில் இஸ்லாம் கடுமையான நிலைபாட்டைக் கொண்டுள்ளது. *ஜனாஸாத் தொழுகை நடத்துவதற்காக ஒருவரது உடல் கொண்டு வரப்பட்டது. இவர்…

அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருவதைத் தவிர, செல்வமோ, மக்களோ அந்நாளில் பயன் தராது.
يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ
The Day when neither wealth nor children will help. Except him who brings to Allah a clean heart [clean from Shirk (polytheism) and Nifaq (hypocrisy)].
[ 26 Ash Shu’ara:88,89]

(இறைவனை) அஞ்சுவோருக்கு சொர்க்கம் அருகில் கொண்டு வரப்படும்.

*அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்* (*இறைவனை) அஞ்சுவோருக்கு சொர்க்கம் அருகில் கொண்டு வரப்படும்*. *வழிகெட்டவர்களுக்கு நரகம் வெளிப்படுத்தப்படும்*. “*அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே*? *அவர்கள் உங்களுக்கு உதவுவார்களா*? அல்லது *தமக்குத் தாமே உதவிக் கொள்வார்களா?* என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்களும்,…

வட்டிக்கு மார்க்கத்தில் அறவே அனுமதி இல்லையா?

*வட்டிக்கு மார்க்கத்தில் அறவே அனுமதி இல்லையா?* இஸ்லாமியப் பொருளாதாரத்தில் வட்டிக்கு அறவே அனுமதி இல்லை. *வட்டியில் இருந்து முற்றிலுமாக முஸ்லிம்கள் விலகிக் கொள்ள வேண்டும்.* வட்டியைக் குறித்து இஸ்லாம் கடுமையான போக்கைக் கொண்டுள்ளது. *வட்டி வாங்குவோர் அல்லாஹ்வுடன் போர் செய்பவர்கள் என்று…

என் தந்தை மரணித்து 10 வருடங்கள் ஆகின்றன. என் தந்தைக்கு சொத்து (வீடு) உள்ளது. வீட்டின் மதிப்பு ஒரு லட்சம் ஆகும். என் தந்தைக்கு ஒரு மனைவி மற்றும் பிள்ளைகளாக நான் மற்றும் எனது தம்பி ,எனது சகோதரி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளோம். சொத்தை எவ்வாறு பங்கிடுவது?

என் தந்தை மரணித்து 10 வருடங்கள் ஆகின்றன. என் தந்தைக்கு சொத்து (வீடு) உள்ளது. வீட்டின் மதிப்பு ஒரு லட்சம் ஆகும். என் தந்தைக்கு ஒரு மனைவி மற்றும் பிள்ளைகளாக நான் மற்றும் எனது தம்பி ,எனது சகோதரி ஆகிய மூன்று…

வலக்கரத்தால் வலி ஏற்பட்ட  இடத்தில் தடவி நோயிலிருந்து பாதுகாப்புக் தேடுதல்

//*வலக்கரத்தால் வலி ஏற்பட்ட இடத்தில் தடவி நோயிலிருந்து பாதுகாப்புக் தேடுதல்*// ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: *நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் துணைவியார் ஒருவருக்காக (நோயிலிருந்து) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். தமது வலக் கரத்தால் (வலியுண்டான இடத்தைப் பரிவுடன்) வருடிக்…

நபி (ஸல்) அவர்கள் ஜின்களை பார்த்தார்களா?

*நபி (ஸல்) அவர்கள் ஜின்களை பார்த்தார்களா?* *நபி (ஸல்) அவர்கள் ஜின்களை பார்த்தும் ஜின்களோடு பேசியும் இருக்கிறார்கள் என்பது தான் சரியான கருத்தாகும்*. இதற்கு மேலுள்ள செய்தியும் பின்வரும் ஹதீஸ்களும் ஆதாரமாக உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னிடம்…