\\*பலவீனமான ஹதீஸ்களை அறிந்து கொள்வோம்….*\\

*அம்பு தைத்தும் முறிக்காமல் தொழுது கொண்டிருந்தார் ஒரு நபித்தோழர்!*

170 حَدَّثَنَا أَبُو تَوْبَةَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ حَدَّثَنِي صَدَقَةُ بْنُ يَسَارٍ عَنْ *عَقِيلِ بْنِ جَابِرٍ* عَنْ جَابِرٍ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْنِي فِي غَزْوَةِ ذَاتِ الرِّقَاعِ فَأَصَابَ رَجُلٌ امْرَأَةَ رَجُلٍ مِنْ الْمُشْرِكِينَ فَحَلَفَ أَنْ لَا أَنْتَهِيَ حَتَّى أُهَرِيقَ دَمًا فِي أَصْحَابِ مُحَمَّدٍ فَخَرَجَ يَتْبَعُ أَثَرَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَزَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْزِلًا فَقَالَ مَنْ رَجُلٌ يَكْلَؤُنَا فَانْتَدَبَ رَجُلٌ مِنْ الْمُهَاجِرِينَ وَرَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَالَ كُونَا بِفَمِ الشِّعْبِ قَالَ فَلَمَّا خَرَجَ الرَّجُلَانِ إِلَى فَمِ الشِّعْبِ اضْطَجَعَ الْمُهَاجِرِيُّ وَقَامَ الْأَنْصَارِيُّ يُصَلِّ وَأَتَى الرَّجُلُ فَلَمَّا رَأَى شَخْصَهُ عَرَفَ أَنَّهُ رَبِيئَةٌ لِلْقَوْمِ فَرَمَاهُ بِسَهْمٍ فَوَضَعَهُ فِيهِ فَنَزَعَهُ حَتَّى رَمَاهُ بِثَلَاثَةِ أَسْهُمٍ ثُمَّ رَكَعَ وَسَجَدَ ثُمَّ انْتَبَهَ صَاحِبُهُ فَلَمَّا عَرِفَ أَنَّهُمْ قَدْ نَذِرُوا بِهِ هَرَبَ وَلَمَّا رَأَى الْمُهَاجِرِيُّ مَا بِالْأَنْصَارِيِّ مِنْ الدَّمِ قَالَ سُبْحَانَ اللَّهِ أَلَا أَنْبَهْتَنِي أَوَّلَ مَا رَمَى قَالَ كُنْتَ فِي سُورَةٍ أَقْرَؤُهَا فَلَمْ أُحِبَّ أَنْ أَقْطَعَهَا رواه ابوداود

நபி (ஸல்) அவர்களுடன் தாதுத் ரிகாஃ என்ற போர்க்களத்திற்கு நாங்கள் சென்றோம். அப்போது (முஸ்லிம்களில்) ஒரு மனிதர் ஒருவரின் மனைவியைக் கொன்றுவிட்டார். (இதை பார்த்தப் அப்பெண்ணின் கணவர்) முஹம்மதின் தோழர்களில் ஒருவரை இரத்தம் சிந்தாமல் விட்டுவிடமாட்டேன் என்று சத்தியம் செய்தார். பின்னர் நபி (ஸல்) அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.

நபி (ஸல்) அவர்கள் ஓரிடத்தில் தங்கினார்கள். அப்போது யார் நம்மை பாதுகாப்பவர் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது முஹாஜிர்களில் ஒருவர், அன்சாரிகளில் ஒருவர் நாங்கள் பாதுகாக்க விருப்பம் தெரிவித்தார்கள். அவ்விருவரையும் வழியின் முகப்பில் நிற்குமாறு நபிகளார் கூறினார்கள். அவ்விருவரும் வழியின் முகப்பிற்குச் சென்றார்கள்.

முஹாஜிர் படுத்தார். அன்சாரித் தோழர் தொழுவதற்காக நின்றார். இதைக் கண்ட அந்த மனிதர் இவர்தாம் இக்கூட்டத்தின் கண்காணிப்பாளர் என்று கருதி *அவர் மீது அம்பை எய்தார். அது அவரைத் தாக்கியது.

அதை (உடலிலிருந்து) அகற்றினார்*.

இவ்வாறு மூன்று அம்புகள் அவர் எறிந்தார். பின்னர் ருகூவு செய்தார். ஸஜ்தா செய்தார். (தொழுது முடித்தவுடன்) தன் தோழரை விழிக்கச் செய்தார். (முஸ்லிம்கள்) எச்சரிக்கை அடைந்துவிட்டார்கள் என்று அறிந்தவுடன் (தாக்கியவர்) ஓடிவிட்டார்.

அன்சாரித் தோழரிடம் ரத்தத்தைப் பார்த்த *முஹாஜிர் தோழர் சுப்ஹானல்லாஹ் என்று கூறிவிட்டு முதல் அம்பு தாக்கியவுடனே என்னை எழுப்பியிருக்க வேண்டாமா? என்று கேட்டார்.

அப்போது நான் ஒரு அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தேன். அதைத் துண்டிக்க நான் விரும்பவில்லை* என்று பதிலளித்தார்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),

நூல்கள் : அபூதாவூத் (170), அஹ்மத் (14177,14336)

இந்தச் செய்தியில் *அகீல் பின் ஜாபிர்* என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரின் நம்பகத் தன்மை உறுதி செய்யப்படவில்லை. இவர் *மஜ்கூல் (யாரென அறிப்படாதவர்*) பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed