நோன்பாளி மனைவியை கட்டியணைப்பதும் & முத்தமிடுவதும்…

நோன்பாளி மனைவியை கட்டியணைப்பதும் & முத்தமிடுவதும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது தமது மனைவியரை முத்தமிடுவார்கள்; கட்டியணைப்பார்கள். அவர்கள் தம் உணர்வுகளை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1927

நோன்பாளி (மனைவியை) கட்டியணைப்பது பற்றி ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். மற்றொருவர் வந்து கேட்ட போது அவருக்கு அனுமதி மறுத்தார்கள். அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், அனுமதி மறுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 2039

மேற்கொண்ட செய்தியின் படிப்பினை

முதியவருக்கு அனுமதியும் & வாலிபனுக்கு மறுப்பும்.. என்கிற போதனை காம உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது தான் முக்கியமான நோக்கயமாக இருப்பதை விளங்கிக் கொள்ளலாம்.

ஏகத்துவம்