Month: August 2022

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரின் தீமைகளை அவர்களை விட்டும் அழித்து விடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றுக்குக் கூலி வழங்குவோம்.
وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَلَنَجْزِيَنَّهُمْ أَحْسَنَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ
Those who believe and do righteous deeds
We will remit their sins, and We will
reward them according to the best
of what they used to do.
29.Surah Al Ankabut 7

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மைந்தன் ஸஜ்தா (செய்யுமாறு கட்டளையுள்ள) வசனத்தை ஓதி ஸஜ்தா செய்தால் ஷைத்தான் அழுதவாறே அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமின் மைந்தன் ஸஜ்தா செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் ஸஜ்தா செய்து விட்டான். அவனுக்கு சொர்க்கம் கிடைக்கப் போகிறது. ஆனால் (ஆதி மனிதர் ஆதமுக்கு) ஸஜ்தா செய்யுமாறு எனக்கு கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே எனக்கு நரகம் தான் என்று கூறியபடி விலகிச் செல்கிறான்.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
إِذَا قَرَأَ ابْنُ آدَمَ السَّجْدَةَ فَسَجَدَ، اعْتَزَلَ الشَّيْطَانُ يَبْكِي، يَقُولُ: يَا وَيْلَهُ أُمِرَ ابْنُ آدَمَ بِالسُّجُودِ فَسَجَدَ فَلَهُ الْجَنَّةُ، وَأُمِرْتُ بِالسُّجُودِ فَأَبَيْتُ فَلِيَ النَّارُ
It was narrated that Abu Hurairah said:
The Messenger of Allah (ﷺ) said: ‘When a son of Adam recites a Sajdah and prostrates, Satan withdraws weeping, saying: ‘Woe is me! The son of Adam was commanded to prostrate and he prostrated, and Paradise will be his; I was commanded to prostrate and I refused, so I am doomed to Hell.’”
Sunan Ibn Majah 1052

நான் உணவைத் தயார் செய்து நபி (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். என் வீட்டில் உருவப் படங்கள் இருந்ததைக் கண்டு திரும்பி விட்டார்கள். صَنَعْتُ طَعَامًا، فَدَعَوْتُ
رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«فَجَاءَ فَرَأَى فِي الْبَيْتِ، تَصَاوِيرَ، فَرَجَعَ
It was narrated that ‘Ali said:
“I made some food and called the Messenger of Allah (ﷺ) (to come and eat).
He came and saw some images in the house, so he went back.”
Ibn-Majah-3359

அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் “அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’ (நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
قَالَ أَبُو هُرَيْرَةَ سَمِعْتُ
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏
“‏ وَاللَّهِ إِنِّي لأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي
الْيَوْمِ أَكْثَرَ مِنْ سَبْعِينَ مَرَّةً
Narrated Abu Huraira: I heard Allah’s Messenger (ﷺ) saying.” By Allah! I ask
for forgiveness from Allah and
turn to Him in repentance more than seventy times a day.”
Sahih al-Bukhari 6307

உங்களில் ஒருவர் அவசரப்படாதவரை அவரது பிரார்த்தனை ஏற்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! “அவசரப்படுதல்” என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு, “ஒருவர் நான் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தேன். ஆனால், அவன் என் பிரார்த்தனையை ஏற்பதாகத் தெரியவில்லை” என்று கூறுவதாகும், என்று பதிலளித்தார்கள்.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«يُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ» قِيلَ: وَكَيْفَ يَعْجَلُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: ” يَقُولُ: قَدْ دَعَوْتُ اللَّهَ فَلَمْ يَسْتَجِبِ
It was narrated from Abu Hurairah that :
the Messenger of Allah (saas) said: “It is necessary that you do not become hasty.” It was said: “What does being hasty mean, O Messenger of Allah?” He said: “When one says: ‘I supplicated to Allah but Allah did not answer me.'”
Sunan Ibn Majah 3853

மற்றவர்களின் பொருள்களை) அபகரிப்பவன் என்னைச் சார்ந்தவன் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ
مَنِ انْتَهَبَ نُهْبَةً، فَلَيْسَ مِنَّا
It was narrated from ‘Imran bin Husain that the Messenger of Allah (ﷺ) said:
“Whoever plunders is not one of us.”
Sunan Ibn Majah 3937

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர்.
قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم
أَفْضَلُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ
It was narrated that ‘Uthmaan bin ‘Affan said:
“The Messenger of Allah said: ‘The most excellent of you is the one who learns the Qur’an and teaches it.'”
Sunan Ibn Majah 212

மோட்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மென்பொருள் செய்து கொடுக்கலாமா?

மோட்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மென்பொருள் செய்து கொடுக்கலாமா? மென்பொருள் தயாரிப்பு என்பது தற்போதைய நவீன காலத்தில் உள்ள ஒரு தொழில் முறையாகும். இது தொடர்பான தடையோ அனுமதியோ மார்க்கத்தில் நேரடியாக காண முடியாது என்றாலும் மார்க்கத்தில் சொல்லப்பட்ட அடிப்படையை வைத்து அதில்…

இங்கு இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட சி வடிவிலான செம்பு வளையம் விற்கப்படுகிறது. இதைக் கையில் அணிந்து கொண்டால் இரத்தக் கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கு நல்லது என்று எழுதப்பட்டுள்ளது. இதை வாங்கிக் கையில் மாட்டினால் மருத்துவ அடிப்படையில் ஆகுமா? அல்லது தாயத்து போன்ற ஷிர்க் ஏற்படுமா?

இங்கு இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட சி வடிவிலான செம்பு வளையம் விற்கப்படுகிறது. இதைக் கையில் அணிந்து கொண்டால் இரத்தக் கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கு நல்லது என்று எழுதப்பட்டுள்ளது. இதை வாங்கிக் கையில் மாட்டினால் மருத்துவ அடிப்படையில் ஆகுமா? அல்லது தாயத்து…

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை நினைவு கூறுபவர்களாக இருந்தார்கள்.
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَذْكُرُ اللَّهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ
‘Urwah narrated from ‘Aishah that: The Messenger of Allah used to remember Allah in all circumstances.
Sunan Ibn Majah 302

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ஜிஹாதில் சிறந்தது எது?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அநியாயக்கார ஆட்சியாளரிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்’ என்று பதிலளித்தார்கள்.
عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْجِهَادِ أَفْضَلُ قَالَ كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ
Tariq ibn Shihab reported: A man asked the Messenger of Allah, peace and blessings be upon him, What is the best jihad? The Prophet said, A word of truth in front of a tyrannical ruler.
Book: Musnad Aḥmad 18449

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர் ‘இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’ அல்லது ‘இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு நோற்பவர் போன்றவராவார்.
السَّاعِي عَلَى الأَرْمَلَةِ وَالمِسْكِينِ كَالمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ أَوْ كَالَّذِي يَصُومُ النَّهَارَ وَيَقُومُ اللَّيْلَ
Narrated Safwan bin Salim: The Prophet (ﷺ) said “The one who looks after and works for a widow and for a poor person, is like a warrior fighting for Allah’s Cause or like a person who fasts during the day and prays all the night.”
Sahih al-Bukhari 6006

*இரவில் பிரத்யேகமாக ஓத வேண்டிய அத்தியாயங்கள்

*இரவில் பிரத்யேகமாக ஓத வேண்டிய அத்தியாயங்கள்..!* \\*அல்முல்கு மற்றும் அஸ்ஸஜ்தா அத்தியாயங்கள்*\\ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் *தபாரகல்லதீ என்று துவங்கும் அல்முல்க் 67 ஆவது அத்தியாயத்தையும் அஸ்ஸஜ்தா என்ற 32 வது அத்தியாயத்தையும் ஓதாமல் உறங்க மாட்டார்கள் என்ற…

அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்!
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
God and His angels give blessings to the Prophet. O you who believe, call for blessings on him, and greet him with a prayer of peace.
33 Surah Al Ahzab 56

அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ் ஒருவரை நேர்வழியில் செலுத்துவது (அரபுகளின் உயர்ந்த சொத்தான) சிகப்பு ஒட்டகங்களை விட உங்களுக்குச் சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
وَاللَّهِ لأَنْ يُهْدَى بِهُدَاكَ رَجْلٌ وَاحِدٌ
خَيْرٌ لَكَ مِنْ حُمْرِ النَّعَمِ ‏
Sahl b. Sa’d reported the prophet (ﷺ) as saying:
I swear on Allah, it will be better for you that Allah should give guidance to one man through your agency than that you should acquire the red ones among the camels.
Sunan Abi Dawud 3661

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உளூ இல்லாத ‎தொழுகையையும்; மோசடி செய்த பணத்திலிருந்து (வழங்கப்படும்) தர்மத்தையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்.
عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
لاَ يَقْبَلُ اللَّهُ عَزَّ وَجَلَّ صَدَقَةً مِنْ غُلُولٍ وَلاَ صَلاَةً بِغَيْرِ طُهُورٍ
Narrated AbulMalih: The Prophet (ﷺ) said: Allah does not accept charity from goods acquired by embezzlement as He does not accept prayer without purification.
Sunan an-Nasa’i 2524

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
தனது செல்வத்தை நியாமின்றி அடைய
முயற்சிக்கும் ஒருவருடன் சண்டையிட்டவர் அதில் கொல்லப்பட்டால் அவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.
عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
«مَنْ أُرِيدَ مَالُهُ بِغَيْرِ حَقٍّ فَقَاتَلَ فَقُتِلَ فَهُوَ شَهِيدٌ»
Narrated Abdullah ibn Amr ibn al-‘As:
The Prophet (ﷺ) said: If the property of anyone is designed to be taken away without any right and he fights and is killed, he is a martyr.
Sunan Abi Dawud 4771

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! தந்தை மகனைக் காக்க

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! தந்தை மகனைக் காக்க முடியாத, மகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை அஞ்சுங்கள்! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம்! ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட…

You missed