யார் இந்த நபித்தோழர்

➖➖➖➖➖➖➖➖
யார் இந்த நபித்தோழர்
➖➖➖➖➖➖➖➖

https://eagathuvam.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-3/

  1. நான் உயிரோடு வாழும் வரையில் உண்மையைத் தவிர வேறெதையும் பேச மாட்டேன் என்று சபதம் எடுத்தவர்.
  2. இவரிடம் நபி (ஸல்) அவர்கள் உன் செல்வத்தில் ஒரு பகுதியை உனக்காக வைத்துக் கொள். அது உனக்கு நல்லது என்று கூறினார்கள்
  3. இவரைக் குறித்து நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை என்று முஆத் பின் ஜபல் (ரலி) கூறியுள்ளார்கள்.
  4. பொய்யான காரணம் எதையும் சொல்லி நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒருபோதும் தப்பித்துக் கொள்ள முடியாது என்று உணர்ந்து, உண்மையைச் சொன்னவர்.
  5. தபூக் போரில் கலந்து கொள்ளாமல் பின் தங்கி விட்டவர்களில் இவரும் ஒருவர்
  6. இந்த நபித் தோழர் நபி (ஸல்) அவர்களுடன் பத்ர் மற்றும் தபூக் போரில் மாத்திரம் கலந்து கொள்ளாமல் இருந்தவர்.
  7. உங்கள் விஷயத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான். என்று நபி (ஸல்) அவர்கள் இவரைப் பார்த்து சொன்னார்கள்
  8. இவரிடம் யாரும் பேசக்கூடாது என்று நபி (ஸல்) வைத்த போது ஃகஸ்ஸான் அரசனால் அவரோடு சேர்ந்து கொள்ளும் படி அழைப்பு விடுக்கப்பட்டவர்.
  9. அல்லாஹ் இவர் இன்னும் இரு நபித் தோழர்கள் விசயத்தில் அல்குர்ஆனின் 9:118 ஆவது வசனத்தை இறக்கினான்.
  10. கூர்மையான கல்லால் அறுக்கப்பட்ட ஆட்டை உண்ணலாமா? என்று நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டவர்.

➖➖➖➖➖➖➖➖➖➖➖
கஅப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள்
➖➖➖➖➖➖➖➖➖➖➖

1 ஆதாரம் புகாரி 4418

2 ஆதாரம் புகாரி 2757

3 ஆதாரம் முஸ்லிம் 5346

4 ஆதாரம் புகாரி 4418

5 ஆதாரம் புகாரி 3889 , 6690

6 ஆதாரம் புகாரி 3951

7 ஆதாரம் புகாரி 4418

8 ஆதாரம் புகாரி 4418

9 ஆதாரம் முஸ்லிம் 5346

10 ஆதாரம் புகாரி 5504


ஏகத்துவம்