அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக…
——————————————————
6:32. இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. ( இறைவனை ) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?
இக்குர்ஆன் வசனத்திற்கேற்ப உயிர் தியாகம் செய்த பெயர் குறிப்பில்லாத நபித்தோழர்.
ஒரு கிராமவாசி நபிகளாரை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றார். ஹிஜ்ரத்தும் செய்தார். ஒரு போர் முடிந்து நபியவர்கள் கனீமத் பொருளை பங்கிட்டுக் கொடுத்த நேரத்தில் அவர் வெளியே சென்றிருந்தார். அவர் வந்தவுடன் அவரிடம் கொடுங்கள் என நபியவர்கள் கூற, அவ்வாறே அவர் வந்தவுடன் தரப்பட்டது.
இது என்ன என்று கேட்டார். நபி ஸல் உங்களிடம் தரச் சொன்னார்கள் என்று கூற, மனச்சங்கடத்துடன் அதை வாங்கியவாறு ஸல் அவர்களிடம் நான் இதை எதிர்பார்த்து இஸ்லாத்தை ஏற்கவில்லை. மாறாக நான் உங்களுடன் ஒரு போரில் கலந்து கொள்ள வேண்டும். எதிரிகளைக் கொல்ல வேண்டும். இறுதியில் என் தொண்டையின் இந்தப் பகுதியில் ஒரு அம்பு பாய்ந்து வந்து நான் ஷஹீதாக்கப்பட வேண்டும்.
என்பதே என் நோக்கம் என்பார். நபி ஸல் அவர்கள் உங்களின் நோக்கம் அதுவாக இருந்தால் அல்லாஹ் அவ்வாறே ஆக்கட்டும். என்றார்கள். அதன் பின் நடந்த போரில் அவர் கொல்லப்பட அவரை கொண்டு வரும்படி நபி ஸல் கூறியபோது அவர் கொண்டு வரப்பட்டார்.
அவரா இவரா என்று நபி ஸல் கேட்டார்கள். ஏனெனில் அவரின் பெயர் கூட தெரியாது. அவர் தன் பெயரை வெளிப் படுத்தவுமில்லை. மேலும் அவர் எப்படி விரும்பினாரோ அவ்வாறே அவரது தொண்டையில் அம்பு பாய்ந்து ஷஹீதாகி இருந்தார். அவருக்கு தம் ஆடையை கஃபனாக நபி ஸல் அணிவித்து அவருக்கு துஆ செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அல்ஹாத்
நூல்: நஸாயி 1954
————————-
ஏகத்துவம்