யார் இந்த நபித்தோழர்
—————————————-
1 நபி (ஸல்) அவர்கள் இந்த நபித்தோழரிடம் திருக்குர்ஆனை ஓதிக்காட்டுமாறு கேட்டார்கள்.

2 இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா? என நபி (ஸல்) அவர்கள் இவரிடம் கேட்டார்கள்.

3 வீட்டுக்குள் நுழைவதற்கு மூன்று முறை அனுமதி கேட்டு நபி வழியை நடைமுறைப்படுத்தியவர்.

4 அபூதல்ஹா (ரலி) அவர்கள் பைருஹா தோட்டத்தின் ஒரு பங்கை இவருக்குக் கொடுத்தார்கள்.

5 அகழ்ப்போரின் போது இவர்களின் நாடி நரம்பில் அம்பு பாய்ந்துவிட்டது.

6 நபி (ஸல்) அவர்களுடன் இப்னு ஸய்யாத் என்பவனை இவர்கள் சந்தித்தார்கள்.

7 இவர்கள் மது அருந்திய கொண்டிருந்த நேரத்தில்தான் மது தடைசெய்யப்பட்டது.

8 கண்டடுக்கப்பட்ட பொருளுக்கு என்ன சட்டம் என்பதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் இவருக்கு கற்றுக் கொடுத்தார்கள்.

9 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் பர்தாவின் சட்டத்தைப் பற்றிக் கேட்டு தெரிந்து கொண்டவர்.

10 உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்தில் இரவுத் தொழுகைக்கு இவரின் தலைமையில் கீழ் மக்கள் தொழும்படி ஏற்பாடு செய்தார்கள்.

—————————————-
உபை பின் கஅப் (ரலி) அவர்கள்!
—————————————-

1 ஆதாரம் முஸ்லிம் (1463)

2 ஆதாரம் முஸ்லிம் (1476)

3 ஆதாரம் முஸ்லிம் (4355)

4 ஆதாரம் புகாரி (2758)

5 ஆதாரம் முஸ்லிம் (4437)

6 ஆதாரம் புகாரி (1354)

7 ஆதாரம் முஸ்லிம் (4012)

8 ஆதாரம் புகாரி (2426)

9 ஆதாரம் முஸ்லிம் (2802)

10 ஆதாரம் புகாரி (2010)
—————————
ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed