*நபி (ஸல்) அவர்கள் ஜின்களை பார்த்தார்களா?*

*நபி (ஸல்) அவர்கள் ஜின்களை பார்த்தும் ஜின்களோடு பேசியும் இருக்கிறார்கள் என்பது தான் சரியான கருத்தாகும்*. இதற்கு மேலுள்ள செய்தியும் பின்வரும் ஹதீஸ்களும் ஆதாரமாக உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னிடம் *நஸீபீன்* என்னுமிடத்தைச் சேர்ந்த *ஜின்களின் குழு ஒன்று வந்தது. அவை நல்ல ஜின்களாயிருந்தன*. அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன.

நான், *அவை எந்த எலும்பையும் எந்த கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்* என்று *அல்லாஹ்விடம் அவற்றுக்காகப் பிரார்த்தித்தேன்*. என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 3860

ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட) உணவு குறித்துக் கேள்வி கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், *அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்பட்ட ஒவ்வொரு பிராணியின் எலும்பும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். அது உங்கள் கரங்களில் இறைச்சியைவிட நிறைவானதாக இருக்கும். ஒவ்வொரு கெட்டிச் சாணமும் உங்களுடைய கால்நடைகளுக்குத் தீவணமாகும்* என்று கூறினார்கள்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), *எனவே, நீங்கள் (இயற்கைக் கடனை நிறைவேற்றிய பின்பு எலும்பு, கெட்டிச் சாணம் ஆகிய) அவ்விரண்டின் மூலம் துப்புரவு (இஸ்தின்ஜா) செய்யாதீர்கள்; அவ்விரண்டும் உங்களுடைய சகோதரர்க(ளான ஜின்க)ளின் உணவாகும்* என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி), நூல் : முஸ்லிம் 767

மேலுள்ள செய்திகளுக்கு மாற்றமாக *நபியவர்கள் ஜின்களை பார்க்கவுமில்லை. ஜின்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டவுமில்லை* என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது : *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜின்களுக்கு(க் குர்ஆனை) ஓதிக்காட்டவுமில்லை; ஜின்களை அவர்கள் பார்க்கவுமில்லை*.

நூல் : முஸ்லிம் 766

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் இக்கூற்று *அபுத்தர்தா (ரலி), அபூஹுரைரா (ரலி), இப்னு மஸ்ஊத்* (ரலி) ஆகிய மூவரும் அறிவிக்கும் செய்திக்கு மாற்றமாக உள்ளது. இம்மூவரும் நடந்து முடிந்த ஒரு விஷயத்தைப் பற்றி கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஜின்களை கண்டு அவர்களுடன் பேசிய தகவல் *இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு சென்றடையாமல் இருந்திருக்கலாம். எனவே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் இக்கூற்று தவறானதாகும்*.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed