Month: July 2022

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்கு சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும். கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்.
مَنِ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ.
We were in the company of the Prophet (ﷺ) and he said, ‘He who can afford to marry should marry, because it will help him refrain from looking at other women, and save his private parts from committing illegal sexual relation; and he who cannot afford to marry is advised to fast, as fasting will diminish his sexual power.”
Narrated ‘Alqama
Sahih al-Bukhari 1905

ஷைத்தானின் உணவு என்ன

//*ஷைத்தானின் உணவு என்ன?*// உணவு உண்பதற்கு முன்னால் *பிஸ்மில்லாஹ்* என்று கூற வேண்டும். இறைவனுடைய பெயரை கூறாமல் உணவு உட்கொண்டால் அந்த உணவு ஷைத்தானிற்கு செல்வதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். *பிஸ்மில்லாஹ் கூறப்படாமல் உண்ணப்படுகின்ற உணவு தான் ஷைத்தானின் உணவாகும்.*…

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வானங்கள் மற்றும் பூமியை படைப்பதற்கு இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு அல்லாஹ் ஒரு புத்தகத்தை எழுதினான். அதிலிருந்து இரு வசனங்களை சூரா அல்பகராவின் இறுதியில் அல்லாஹ் அருளியுள்ளான். மூன்று இரவுகள் ஒரு வீட்டில் அவை ஓதப்பட்டால் அவ்வீட்டை ஷைத்தானால் நெருங்க முடியாது.
عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ إِنَّ اللَّهَ كَتَبَ كِتَابًا قَبْلَ أَنْ يَخْلُقَ السَّمَاوَاتِ وَالأَرْضَ بِأَلْفَىْ عَامٍ أَنْزَلَ مِنْهُ آيَتَيْنِ خَتَمَ بِهِمَا سُورَةَ الْبَقَرَةِ وَلاَ يُقْرَآنِ فِي دَارٍ ثَلاَثَ لَيَالٍ فَيَقْرَبُهَا شَيْطَانٌ ‏”‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
Narrated An-Nu’man bin Bashir:
that the Prophet (ﷺ) said: “Indeed Allah wrote in a book two thousand years before He created the heavens and the earth, and He sent down two Ayat from it to end Surat Al-Baqarah with. If they are recited for three nights in a home, no Shaitan shall come near it.”
Jami` at-Tirmidhi 2882

\ஷைத்தானின் தூண்டுதலை விட்டும் பாதுகாப்பு பெற…\

\\*ஷைத்தானின் தூண்டுதலை விட்டும் பாதுகாப்பு பெற…\\* சகல வல்லமையும் படைத்த இறைவனிடத்தில் கையேந்தி பாதுகாப்புத் தேடுமாறு திருக்குர்ஆன் நமக்குக் கற்றுத்தருகிறது. *ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக!* அவன் செவியுறுபவன்; அறிந்தவன். அல்குர்ஆன் (7 : 200) *ஷைத்தானிடமிருந்து…

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின்
அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த்
தியாகிகளுடனும் நல்லோருடனும் இருப்பார்கள்.
அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.
وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ
فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ
وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ ۚ
وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا
Whoever obeys God and the Messenger—these are with those whom God has blessed—among the prophets, and the sincere, and the martyrs, and the upright. Excellent are those as companions.
[ 4 An-Nisa:69]

ஜனாஸா- பித்அத்கள்

ஜனாஸா– பித்அத்கள் மய்யித்துக்கு நகம் வெட்டுதல்; பல் துலக்குதல்; அக்குள் மற்றும் மர்மஸ்தான முடிகளை நீக்குதல் மய்யித்தின் பின் துவாரத்திலும் மூக்கிலும் பஞ்சு வைத்து அடைத்தல் மய்யித்தின் வயிற்றை அழுத்தி உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றுதல் நி ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது…

ஜின்களுக்கு இறைதூதர் யார்?

*ஜின்களுக்கு இறைதூதர் யார்?* *நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால், ஜின்களுக்கென்று தனியாக இறைதூதர்கள் வந்தனர்*. இதற்கு திருக்குர்ஆனில் ஆதாரம் உள்ளது. ஜின், மனித சமுதாயமே! *உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக் கூறி இந்த நாளை நீங்கள் சந்திக்கவிருப்பதை உங்களுக்கு எச்சரிக்கை செய்யும்…

அல்லாஹ்வின் தூதரே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்? என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “அவர்களில் இறையச்சம் உடையவரே” என்று பதிலளித்தார்கள்.
يَا رَسُولَ اللَّهِ مَنْ أَكْرَمُ النَّاسِ قَالَ ‏
‏ أَتْقَاهُمْ
Narrated Abu Huraira: The people said, “O Allah’s Messenger (ﷺ)! Who is the most honorable amongst the people (in Allah’s Sight)?” He said, “The most righteous amongst them.”
Sahih al-Bukhari 3490

நபியின் கப்ருக்கு சென்றால் என்ன ஓதவேண்டும்?

நபியின் கப்ருக்கு சென்றால் என்ன ஓதவேண்டும்? நாம் பொது மையவாடிக்குச் சென்றால் கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அந்தப் பிரார்த்தனையைத் தான் நபியின் கப்ருக்குச் சென்றால் கூறிக்…

நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்(9:40)
நபி(ஸல்) அவர்களுடன் நான் (ஸவ்ர்) குகையில் இருந்தபோது அவர்களிடம், ‘(குகைக்கு மேலிருந்து நம்மைத் தேடிக் கொண்டிருக்கும்) இவர்களில் எவராவது தம் கால்களுக்குக் கீழே (குனிந்து) பார்த்தால் நம்மைக் கண்டு கொள்வார்’ என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘எந்த இரண்டு நபர்களுடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கிறானோ அவர்களைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள், அபூ பக்ரே!’ என்று கேட்டார்கள்.
صلى الله عليه وسلم وَأَنَا فِي الْغَارِ لَوْ أَنَّ أَحَدَهُمْ نَظَرَ تَحْتَ قَدَمَيْهِ لأَبْصَرَنَا‏.‏ فَقَالَ ‏‏ مَا ظَنُّكَ يَا أَبَا بَكْرٍ بِاثْنَيْنِ اللَّهُ ثَالِثُهُمَا
Narrated Abu Bakr: I said to the Prophet (ﷺ) while I was in the Cave. “If any of them should look under his feet, he would see us.” He said, “O Abu Bakr! What do you think of two (persons) the third of whom is Allah?”
Sahih al-Bukhari 3653

உண்மையானத் தோழர்

உண்மையானத் தோழர் அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கடுமையாக நேசித்தார்கள். ஒரு உண்மை நண்பன் எப்படியெல்லாம் நடந்து கொள்வாரோ அத்தனை தகுதிகளையும் அவர்கள் பெற்றிருந்தார்கள். அபூபக்ரும் ஏனைய தோழர்களும் நபி (ஸல்) அவர்களை விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள் என்ற கருத்தை…

தவறு செய்தால் மன்னிப்புக் கேட்கும் உயரிய பண்பாளர்

தவறு செய்தால் மன்னிப்புக் கேட்கும் உயரிய பண்பாளர் மனிதன் என்ற அடிப்படையில் அபூபக்ர் (ரலி) அவர்களும் சில சிறிய தவறுகளைச் செய்தார்கள். ஆனால் தவற்றுக்குப் பிறகு கௌரவம் பார்க்காமல் பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் வலியச் சென்று அவரிடத்தில் மன்னிப்புக் கோரும் உயரிய…

நிதானமுள்ள நபித்தோழர் 

நிதானமுள்ள நபித்தோழர் உம்ரா செய்வதற்காக இஹ்ராம் ஆடையை அணிந்து கொண்டு நபித் தோழர்கள் ஆசையுடன் ஆர்வத்துடன் இறையில்லத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். ஆனால் மக்கத்து இணை வைப்பாளர்கள் அவர்களை உள்ளே வரவிடாமல் அடுத்த ஆண்டு வருமாறு உடன்படிக்கை செய்து கொண்டனர். நபி (ஸல்)…

அனுபவமிக்க ஆலோசகர்

அனுபவமிக்க ஆலோசகர் முதிர்ந்த வயதும் சிறந்த அனுபவமும் பெற்றிருந்த அபூபக்ர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் குடிமக்களின் நலன் தொடர்பாக இரவில் ஆலோசனை செய்யும் அளவிற்கு பெருமானாருடன் அபூபக்ர் (ரலி) அவர்கள் நெருக்கத்தைப் பெற்றிருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் கூறுவதாவது:…

அதிகம் உண்மைப்படுத்திய நபித்தோழர்

அதிகம் உண்மைப்படுத்திய நபித்தோழர் ஆரம்ப நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன போது எல்லோரும் நபியவர்களை உண்மையாளர் என்று ஏற்றுக் கொள்ளவில்லை. அந்நேரத்தில் அவர்கள் கூறுவதையெல்லாம் உண்மை என்று நம்புவதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் மாத்திரமே இருந்தார்கள்.…

ஹிஜ்ரத்தின் போது நபிகளாருடன்

ஹிஜ்ரத்தின் போது நபிகளாருடன் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் வாழ்ந்த போது இணைவைப்பாளர்கள் அவர்களுக்கு ஏராளமான இடயூறுகளை ஏற்படுத்தினார்கள். அப்போது ஊருக்கும், உலகத்திற்கும் அஞ்சாமல் ஓடோடி வந்து பெருமானாரைக் காத்தவர் தான் அபூபக்ர் (ரலி) அவர்கள். உர்வா பின் ஸுபைர் (ரஹ்)…

நபிகளாரால் முற்படுத்தப்பட்ட நபித்தோழர்

நபிகளாரால் முற்படுத்தப்பட்ட நபித்தோழர் மக்களுக்குத் தலைமை தாங்கி தொழவைப்பது ஒரு சிறந்த அந்தஸ்தாகும். இதற்கு மார்க்கத்திலே சில தகுதிகள் சொல்லப்பட்டு இருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் அவர்கள் தான் மக்களுக்கு இமாமத் செய்து வந்தார்கள். அவர்கள் நோய்வாய்ப்பட்டு…

அபூபக்கர் மிகுதியாக அழுபவராக இருந்தார். குர்ஆனை ஓதும் போது அவரால் தமது கண்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாது. இணை வைக்கும் குறைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
وَكَانَ أَبُو بَكْرٍ رَجُلاً بَكَّاءً لاَ يَمْلِكُ عَيْنَيْهِ إِذَا قَرَأَ الْقُرْآنَ، فَأَفْزَعَ ذَلِكَ أَشْرَافَ قُرَيْشٍ مِنَ الْمُشْرِكِينَ‏.
Abu Bakr was a Softhearted person and could not help weeping while reciting the Qur’an. The chiefs of the Quraish pagans became afraid of that (i.e. that their children and women might be affected by the recitation of Qur’an).
Narrated `Aisha: Sahih al-Bukhari 476

//தீங்கு செய்தவருக்கும் நன்மை செய்யும் மனிதராக மாற்றிய திருக்குர்ஆன்//

//தீங்கு செய்தவருக்கும் நன்மை செய்யும் மனிதராக மாற்றிய திருக்குர்ஆன்// அபூபக்ர் (ரலி) அவர்களின் உறவினரான மிஸ்தஹ் என்பவர் ஆயிஷா (ரலி) அவர்களின் மீது அவதூறு கூறிய போது அபூபக்ர் (ரலி) அவர்கள் கண்ணீர் வடித்து கடுமையான துன்பத்திற்கு ஆளானார்கள். ஆயிஷா (ரலி)…

You missed