Category: Quran & Hadith Images

நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நன்மையே உள்ளது. அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி கூலி வழங்கப்படும் என்று (இறைவன் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

39 Surah Az Zumar 10 நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நன்மையே உள்ளது. அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி கூலி வழங்கப்படும் என்று (இறைவன் கூறுவதைத்) தெரிவிப்பீராக! قُلْ يَا…

இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக!

26. Ash-Shur’ara, Ayah 85 இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக! وَاجْعَلْنِي مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ Make me of the inheritors of the Garden of Bliss.

நட்டமில்லாத ஒரு வியாபாரத்தை (Trade that will not fail)[Al Qur’an 35:29]

நட்டமில்லாத ஒரு வியாபாரத்தை (Trade that will not fail) அல்லாஹ்வின் வேதத்தைப் படித்து தொழுகையை நிலைநாட்டி நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவோர் நட்டமில்லாத ஒரு வியாபாரத்தை எதிர்பார்க்கின்றனர். إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَأَقَامُوا…

ஒரு பெண் கருவுறுவதும், ஈன்றெடுப்பதும் அவனுக்குத் தெரியாமல் இருப்பதில்லை. ஒருவனுக்கு வாழ்நாள் வழங்கப்படுவதும், அவனது வாழ்நாள் குறைக்கப்படுவதும் பதிவேட்டில் இல்லாமல் இல்லை. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

அல்லாஹுவின் உற்ற நண்பர் இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவுக் கூறும் விதமாக கொண்டாடப்படும் இத்திருநாளில்…

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு…… ————————————————— அல்லாஹுவின் உற்ற நண்பர் இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவுக் கூறும் விதமாக கொண்டாடப்படும் இத்திருநாளில்… இப்ராஹீம் நபியும் அவர்களது குடும்பத்தினரும் செய்தது போன்ற தியாகத்தை நம்மால் செய்ய முடியாவிட்டாலும்………. அவர்கள்…

துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

மறுமை நாளில் விசாரணை*
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மறுமை நாளில் விசாரணை செய்யப்படும் எவரும் அழிந்தேபோய் விடுவார் என்று கூறினார்கள்.
அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! எவரது வினைப் பதிவுச் சீட்டு அவரது வலக் கரத்தில் வழங்கப்படுமோ அவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்என்றல்லவா அல்லாஹ் கூறுகின்றான்? (84:8) என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர் களின் நன்மை தீமைகளின் பட்டியலை அவர்களுக்கு முன்) சமர்ப்பிக்கப்படுவது தான். மறுமையில் துருவித்துருவி விசாரணை செய்யப்படும் எவரும் வேதனை செய்யப்படாமலிருப்பதில்லை என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) அவர்கள்
நூல் : புகாரி : 6537