Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

ஆது

ஆது ‘ஹூத்‘ எனும் இறைத்தூதர் அனுப்பப்பட்ட சமுதாயமே ‘ஆது’ சமுதாயம் எனப்படும். இவர்கள் மிகவும் வலிமை மிக்கவர்களாக இருந்தனர். ஹூத் நபியை ஏற்க மறுத்து அக்கிரமம் புரிந்ததால் வறண்ட காற்றை அனுப்பி இறைவன் அவர்களை அழித்தான்.

அன்ஸாரிகள்

அன்ஸார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களை ஏற்றுக் கொண்ட தோழர்களும் மக்காவில் இருந்து விரட்டப்பட்டு மதீனாவில் தஞ்சம் புகுந்தனர். அவ்வாறு தஞ்சம் புகுந்தவர்களை அரவணைத்து ஆதரவளித்து பேருதவி செய்தவர்களே அன்ஸார்கள் எனப்படுவர். இவர்களில் ஒவ்வொருவரும் அகதிகளாக வந்த மக்காவைச் சேர்ந்த…

அர்ஷ்

அர்ஷ் எல்லாம் வல்ல ஏகஇறைவன் வீற்றிருந்து ஆட்சி செய்யும் இருக்கை அர்ஷ் எனப்படும். இது வானங்களையும், பூமியையும் விட மிகவும் பிரம்மாண்டமானது. இறைவன் அர்ஷின் மீது வீற்றிருக்கிறான் என்று திருக்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.

அரஃபாத்

அரஃபாத் மக்காவிற்கு வெளியே அமைந்துள்ள மாபெரும் மைதானத்தின் பெயரே அரஃபா அல்லது அரஃபாத் ஆகும். ஹஜ் கடமையை நிறைவேற்றுபவர்கள் ஹஜ் மாதம் பிறை ஒன்பதில் இம்மைதானத்தில் குழுமுவது கட்டாயக் கடமையாகும். இம்மைதானத்தில் சிறிது நேரமாவது தங்காவிட்டால் ஹஜ் நிறைவேறாது. ஒரே நேரத்தில்…

அய்யூப்

அய்யூப் இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். யூத, கிறித்தவர்கள் இவரை யோபு என்பர். இவ்வுலகில் பல்வேறு நோய்களாலும், வறுமையாலும் கடுமையாக இவர் சோதிக்கப்பட்டார். குடும்பத்தினரையும் இழந்தார். பின்னர் இறையருளால் நோய்கள் விலகின. அவரது குடும்பத்தினரும் திரும்பக் கிடைத்தனர். அவரது உடலில் புழுக்கள் உற்பத்தியாகின…

அல்லாஹ்

அல்லாஹ் ‘அல்லாஹ்’ என்ற சொல் அகில உலகையும் படைத்துப் பராமரிக்கும் சர்வ அதிகாரமும், வல்லமையும் படைத்த ஏகஇறைவனை மட்டுமே குறிக்கும் அரபுமொழிச் சொல்லாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்பே இச்சொல்லை அரபுகள் பயன்படுத்தி வந்தனர். அவர்கள் வணங்கி வந்த சிலைகளை…

வானவர்கள்

வானவர்கள் இறைவனது படைப்புகளில் வானவர்கள் என்றொரு இனம் இருப்பதாக திருக்குர்ஆன் கூறுகிறது. இவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். இவர்களில் ஆண் பெண் என்ற பால் வேற்றுமை இல்லை. எனவே இனப்பெருக்கம் செய்ய மாட்டார்கள். இவர்களை இறைத்தூதர்கள் தவிர மற்ற மனிதர்கள் காண இயலாது.…

நோன்பு

நோன்பு இறைவன் கட்டளையிட்டான் என்பதற்காக வைகறையிலிருந்து சூரியன் மறையும் வரை உண்ணாமலும், பருகாமலும் குடும்ப வாழ்வில் ஈடுபடாமலும் இருக்கும் கட்டுப்பாடே நோன்பு எனப்படும். ஆண்டுதோறும் ரமலான் எனும் மாதம் முழுவதும் இவ்வாறு நோன்பு நோற்பது கட்டாயமாகும். இது தவிர சில குற்றங்களுக்கான…

நரகம்

நரகம் அல்லாஹ்வின் கட்டளையையும், அவனுடைய தூதர்களின் வழியையும் பின்பற்றாத மக்களுக்கு மறுமையில் விசாரணைக்குப் பிறகு வழங்கப்படும் தண்டனையே நரகம் எனப்படும். சில குற்றங்களைச் செய்தவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். இக்குற்றங்களைத் தவிர ஏனைய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இறைவனின் கருணையால் மன்னிக்கப்பட்டால் சொர்க்கம்…

நம்பிக்கை கொள்வது – நம்பிக்கை கொண்டோர்

நம்பிக்கை கொள்வது – நம்பிக்கை கொண்டோர் திருக்குர்ஆன் அதிகமான இடங்களில் ‘நம்பிக்கை கொள்வது’ ‘நம்பிக்கை கொண்டோர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளது. பொதுவாக நம்பிக்கை கொள்வது என்பதை நாம் என்ன பொருளில் புரிந்து கொள்வோமோ அந்தப் பொருளில் இந்தச் சொல் பயன்படுத்தப்படவில்லை. மாறாக,…

நயவஞ்சகர்கள்

நயவஞ்சகர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்த ஊரான மக்காவிலிருந்து விரட்டப்பட்டு மதீனா எனும் நகரில் தஞ்சமடைந்தார்கள். அங்கே அவர்களின் பிரச்சாரத்திற்கு நல்ல பலன் கிடைத்ததால் பெரும்பாலான மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர். இதனால் அதிகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வந்து…

முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடமைகளில் முக்கியமான கடமை தொழுகையாகும்

தொழுகை முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடமைகளில் முக்கியமான கடமை தொழுகையாகும். தொழுகை என்பது சிறிது நேரம் நின்றும், சிறிது நேரம் குனிந்தும், சிறிது நேரம் நெற்றியை நிலத்தில் வைத்தும், சிறிது நேரம் அமர்ந்தும் ஒவ்வொரு நிலையிலும் ஓத வேண்டியவைகளை ஓதியும் நிறைவேற்றப்படும்…

தூதர்கள்

தூதர்கள் மனிதர்களை நல்வழிப்படுத்த மனிதர்களிலிருந்தே தகுதியானவர்களை இறைவன் தேர்வு செய்து ஒரு வாழ்க்கை நெறியைக் கொடுத்து அனுப்புவான். இவ்வாறு அனுப்பப்படுவோரை இறைத்தூதர்கள் என இஸ்லாம் குறிப்பிடுகிறது. முதல் மனிதரிலிருந்து இறுதித் தூதராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை ஏராளமான தூதர்கள்…

சொர்க்கம் – சொர்க்கச் சோலைகள்

சொர்க்கம் – சொர்க்கச் சோலைகள் இவ்வுலகம் முழுமையாக அழிக்கப்பட்ட பின் அனைவரும் இறைவன் முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். இவ்வுலகில் இறைவனையும், இறைத்தூதர்களையும் ஏற்று, அவர்கள் காட்டிய வழியில் நடந்த நல்லோர்க்கு இறைவன் அளிக்கும் பரிசே சொர்க்கமாகும். சொர்க்கத்தில் நுழையும் ஒருவர் அதில்…

இணை கற்பித்தல்

இணை கற்பித்தல் அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே ஒரு இறைவனை அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. “அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை; எதுவும் இல்லை” என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும், ஒரே இறைவனாகிய…

உறவினரைப் பேணல்

உறவினரைப் பேணல் உறவினருக்கு உதவுதல் – 2:83, 2:177, 2:215, 4:36, 16:90, 17:26, 30:38 உறவினருக்கு மரண சாசனம் செய்தல் – 2:180 உறவினர் மீது அன்பு செலுத்தல் – 42:23 சொத்தைப் பிரிக்கும்போது வாரிசு அல்லாத உறவினர்களையும் கவனித்தல்…

பெற்றோரும் பிள்ளைகளும்

பெற்றோரும் பிள்ளைகளும் பெயர் சூட்டுதல் – 3:36 பெற்றோரைப் பராமரித்தல் – 2:83, 2:215, 4:36, 6:151, 17:23, 19:32, 29:8, 31:14, 46:15 பிள்ளைகளுக்கு மார்க்க விஷயம் குறித்து வலியுறுத்துதல் – 2:132,133, 11:42, 31:13, 31:17-19, 37:102, 46:17…

பெண்ணுரிமை

பெண்ணுரிமை ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உரிமைகள் உள்ளன – 2:228 ஆணும் பெண்ணும் பல விஷயங்களில் சமம் – 2:187 சம்மதமின்றி பெண்களை மணந்தால் செல்லாது – 4:19 பிரிந்துவிட விரும்பும் மனைவியைக் கட்டாயப்படுத்தி தன்னிடம் வைத்துக் கொள்ள கணவனுக்கு உரிமை…

விவாகரத்து (தலாக் )

விவாகரத்து ஒத்துவராதவர்கள் பொருளாதாரக் காரணத்திற்காக சேர்ந்திருக்கத் தேவையில்லை – 4:130 விவாகரத்துக்கு அவசரப்படக் கூடாது – 4:34,35 தம்பதியரிடையே மற்றவர்கள் தலையிட்டு சமரசம் செய்தல் அவசியம் – 4:35 துன்புறுத்துவதற்காக விவாகரத்துச் செய்யாமல் வைத்துக் கொள்ளக் கூடாது – 2:231 முதல்…

குடும்ப வாழ்க்கை

குடும்ப வாழ்க்கை தம்பதிகள் ஒருவரையொருவர் மகிழ்ச்சியடையச் செய்தல் – 2:187, 4:19 மாதவிடாயின்போது உடலுறவைத் தவிர்த்தல் – 2:222 தாம்பத்தியத்தில் கட்டுப்பாடு இல்லை – 2:223 மனைவியர் கணவனுக்குக் கட்டுப்படுதல் – 2:228, 4:32, 4:34 திருமணத்தால் மன அமைதி –…