*திருக்குர்ஆன் கேள்வி* – பதில் (Part 9)
கேள்வி: *அல்லாஹ்வை விட்டும் உங்கள் கவனத்தை திசை திருப்பியது எது?*
பதில்: *செல்வத்தை அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை* (குர்ஆன் 102:1)
கேள்வி: *ஷைத்தான்களின் உடன்பிறப்புக்கள் யார்?*
பதில்: *விரயம் செய்வோர்* (குர்ஆன் 17:27)
கேள்வி: *அதிகமாக என்ன செய்கின்றவனாக மனிதன் இருக்கின்றான்.?*
பதில்: தர்க்கம் (குர்ஆன் 18:54)
கேள்வி: *அல்லாஹ்வின் பாதையில் பேரிடுபவன் யார்?*
பதில்: *அல்லாஹ்வின் (ஏகத்துவ) வாக்கு மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகின்றாரோ* அவரே அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார் (ஆதாரம் : புகாரி 2810)
கேள்வி: *கனவின் விளக்கத்தை அல்லாஹ் யாருக்கு கற்றுக் கொடுத்தான்?*
பதில்: *நபி யூசுஃப் (அலை) அவர்களுக்கு* (அல் குர்ஆன் 12:37)
கேள்வி: *யாருடைய பாதங்களை நரகம் தீண்டாது?*
பதில்: *அல்லாஹ்வின் பாதையில் போர் செய்து காலில் புழுதி படிந்த பாதங்களை நரகம் தீண்டாது* (ஆதாரம் : புகாரி 2811)
கேள்வி: *யூசுஃப் நபி காலத்தில் மன்னரின் கனவைப் பற்றி கனவின் விளக்கம் கூறுபவர்கள் என்ன கூறினார்கள்?*
பதில்: *அர்த்தமற்ற கனவு* என்று கூறினர் (அல் குர்ஆன் 12:43)
கேள்வி: *அம்மார் (ரலி) அவர்கள் யாரால் கொல்லப்படுவார்கள்* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
பதில்: ஒரு கலகக்கூட்டத்தினரால் (ஆதாரம் : புகாரி 2812)
கேள்வி: *மன்னரின் கனவின் உண்மையான விளக்கத்தை கூறியதால் நபி யூசுஃப் அவர்களுக்கு கிடைத்த பதவி என்ன?*
பதில்: *அந்நாட்டின் கருவூல அதிகாரியாகவும்* பொறுப்ப கொடுக்கப்பட்டது. (குர்ஆன் 12:58