தமிழக அரசு பொங்கலுக்கு கொடுக்கும் வேட்டி ,சேலை மற்றும் இலவச அரிசி , கரும்பு ஆகியவை வாங்கலாமா எண்ணத்தை பொறுத்தே செயல்கள் அமைகின்றனஅரசு கொடுக்கும் எண்ணம் பொங்கலுக்காக கொடுக்கிறது
எண்ணத்தை பொறுத்தே கூலி அமையும் என்பது நபிமொழியாக இருந்தாலும் அதை மாத்திரம் வைத்தே நாம் அனைத்திற்க்கும் சட்டங்களை பத்வாக்களை பெறவோ அல்லது அதற்க்கு ஏற்றார் போல் ஆதாரங்களை தேடவோ கூடாது
காரணம் எண்ணத்தில் வரதட்சணை வாங்கும் எண்ணம் இல்லை ஆனால் பெற்றோர்களின் வற்புருத்தலால் தான் நான் எனது திருமணத்தில் வரதட்சணையை வாங்கினேன் என்று அதையும் நியாய படுத்தலாம்
எண்ணங்களும் அதை சார்ந்த நடவடிக்கைகளும் ஒன்றாக அமைந்திருக்க வேண்டும் என்பதே அந்த ஹதீசின் கருத்தாக புரிய வேண்டும்
நிர்பந்தம் என்ற சில இக்கட்டான சந்தர்ப்பத்தில் மட்டும் தான் நாம் இந்த ஹதீசின் கருத்தை வைத்து சிலவைகளை நியாய படுத்த முடியும்
பண்டிகைகளை முன்னிட்டு அரசாங்க சார்பாக எதை மக்களுக்கு இலவசமாக தந்தாலும் அதை வைத்து மக்களின் ஓட்டை மீண்டும் பெற வேண்டும் அல்லது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் மூல காரணமே தவிர அந்த பண்டிகைகள் அல்லது அந்த பண்டி சார்ந்த மதங்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்பது அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் அல்ல
அனைத்து மதத்தினர்களும் கலந்து வாழும் ஒரு நாட்டில் ஒரு பண்டிகையை காரணமாக வைத்து அனைத்து மக்களுக்கும் ஒரு சேவையை செய்கின்றனர் என்று இதை எடுத்து கொண்டாலே போதுமானது
காரணம் இது போன்ற அன்பளிப்புகள் இலவசங்கள் யாவும் ஒரு மதத்தின் சொந்த பணத்தில் இருந்தோ அல்லது ஒரு இனத்தின் வருவாயில் இருந்தோ கொடுக்கப்படுவதில்லை
மாறாக அனைத்துமே மக்களிடம் இருந்து பெறும் வரிப்பணத்தில் இருந்து தான் தரப்படுகின்றது
நமது வரிப்பணத்திலிருந்து தரப்படும் ஒன்றை பெறுவது அவரவர் சுய விருப்பத்தில் உள்ளது அதை தடை என்று கூற முகாந்திரம் இல்லை
காரணம் பொங்கலை முன்னிட்டோ அல்லது இதர பண்டிகைகளை முன்னிட்டோ தரும் பொருட்களை பெறும் நாட்டவர்கள் யாவரும் அந்த பண்டிகைகளை அந்த நாளில் கொண்டாடுவதும் இல்லை
அவ்வாறு பெறுவோர் அதை கொண்டாடித்தான் ஆக வேண்டும் என்ற சட்டமும் இல்லை
ஒரு வேளை அவ்வாறு ஒரு சட்டம் இருந்தால் அவைகளை தவிர்க்க வேண்டும் என்று நாம் கூறலாம்
سَمَّاعُونَ لِلْكَذِبِ أَكَّالُونَ لِلسُّحْتِ ۚ فَإِن جَاءُوكَ فَاحْكُم بَيْنَهُمْ أَوْ أَعْرِضْ عَنْهُمْ ۖ وَإِن تُعْرِضْ عَنْهُمْ
அன்றியும், இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்போராகவும், விலக்கப்பட்ட பொருட்களையே விழுங்குவோராகவும் இருக்கின்றனர்.
(நபியே!) இவர்கள் உம்மிடம் வந்தால், இவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும்; அல்லது இவர்களைப் புறக்கணித்து விடும்
அல்குர்ஆன் : 5:42
மேலும் இவைகளை ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு சமூகமோ தவிர்க்க நாடினால் இதை வைத்து அரசாங்க அதிகாரிகள் தான் இலாபம் அடைவார்களே தவிர அதனால் நாட்டுக்கு ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை
அதே நேரம் அவ்வாறு தரும் பொருள்கள் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகவோ அல்லது ஒரு மதத்தின் வழிபாட்டை ஊக்குவிக்கும் பொருளாகவோ அல்லது பட்டாசு போன்ற வீண் விரயமான பொருளாகவோ இருந்தால் அதை வாங்காது தவிர்ப்பது மார்க்கத்தின் விதிமுறைக்கு உட்பட்ட காரியமாகும்
இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் நாட்டில் வறுமை பெருகுவதற்க்கும் அத்தியாவசிய தேவைகளே நிறைவேற்றப்படாமல் இருப்பதற்க்கும் இது போல் தேவையற்ற இலவசங்களும் அறிவிப்புகளும் தான் மூல காரணமாக உள்ளது
அரசாங்கம் இவைகளை செய்து விட்டு மறுபுறத்தில் இந்த பொருளாதரத்தை சமாளிக்க மீண்டும் பல வழிகளில் நாட்டு மக்களின் உழைப்பை தான் வரி விதிப்பு அல்லது வரி கூட்டல் எனும் பெயரால் அபகரித்து கொண்டுள்ளனர்
சுருங்க சொன்னால் இஸ்லாத்தை தழுவிய ஒரு மனிதன் தவிர்க்க வேண்டிய பொருளாதாரமும் பொருள்களும் மொத்தம்
அடிப்படை ஹராமானது
அபகரிப்பு அல்லது ஏமாற்றுதல்
பிறர் பொருளை முறையின்றி உண்ணுதல்
وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِّنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنتُمْ تَعْلَمُونَ
அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்
மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்
அல்குர்ஆன் : 2:188
الله اعلم