முஹம்மது நபி ஸல் அவர்கள் பற்றி …
▪︎ தாயின் வயிற்றில் இருக்கும்போதே தந்தையை இழந்தவர்.
▪︎ தனது ஆறு வயதில் தாயை இழந்தவர், முழு அனாதையாக வளர்ந்தவர்.
▪︎ உறவினர்களின் ஆதரவில் வளர்ந்தவர், நற்குணமிக்க சிறுவர்.
▪︎ தீய குணங்களில் இருந்து பாதுகாக்கப்பட்ட இளைஞர்.
▪︎ ஆடுகளை மேய்த்தவர், அமானிதங்களை பாதுகாத்தவர்.
▪︎ சமாதான புருஷர், நல்லிணக்க நாயகர்.
▪︎ நேர்மையான வியாபாரி, வாக்கு நாணயம் மிக்கவர்.
▪︎ தொழிலாளியாக பணிபுரிந்தவர், விதவையை முதலாவதாக திருமணம் செய்தவர்.
▪︎ பிரபஞ்சத்தை சிந்தித்துப் பார்த்தவர்.
▪︎ படைத்தவனை தேடி தியானித்தவர்.
▪︎ படைத்தவனின் அருளைப் பெற்றவர்.
▪︎ இறைத் தூதுத்துவத்தை பெற்றவர்.
▪︎ மனிதர்களைப் பற்றி கவலைப்பட்டவர்.
▪︎ இறைவனுக்கு இணை வைப்பதை வெறுத்தவர்.
▪︎ மக்களுக்கு விடுதலை பெற்று கொடுத்தவர்.
▪︎ சிலை வழிபாட்டை வெறுத்தவர், படைத்தவனின் பால் மக்களை அழைத்தவர்.
▪︎ சொர்க்கத்தைக் கொண்டு மக்களுக்கு நற்செய்தி கூறியவர்.
▪︎ நரகத்தை விட்டும் எச்சரித்தவர்.
▪︎ சத்தியப்பாதையில் துணிவு மிக்கவர்.
▪︎ துன்பங்கள் துயரங்களை தாங்கியவர்.
▪︎ கல்லால் அடிவாங்கியவர், வசை பேச்சுகளுக்கு ஆளானவர்.
▪︎ எதையும் தாங்கும் இதயம் உடையவர்.
▪︎ நற்குணத்தின் தாயகமானவர்.
▪︎ சத்தியத்திற்காக நாடு துறந்தவர்.
▪︎ உற்றாரால் புறக்கணிக்கப்பட்டவர், சகிப்புத் தன்மைக்கு பெயர் போனவர்.
▪︎ அர்ப்பணிப்புக்கு எடுத்துக்காட்டானவர்.
▪︎ போர்க்களங்களை சந்தித்தவர், இழப்புகளை தாங்கிக் கொண்டவர்.
▪︎ தியாகிகளை உருவாக்கியவர், மாபெரும் புரட்சியாளர்.
▪︎ மாவீரர், மடமையை அகற்றியவர்.
▪︎ அறிவுக் கண்களைத் திறந்தவர்.
▪︎ சிறந்த வழிகாட்டி, படைத்தளபதி.
▪︎ தன்னை படைத்தவனின் அடிமை என பெருமை அடைந்தவர்.
▪︎ இலட்சியத்தை நிறைவேற்றியவர்.
▪︎ சிற்றின்ப வாழ்க்கையை வெறுத்தவர்.
▪︎ பேரின்ப வாழ்க்கைக்காக பாடுபட்டவர்.
▪︎ உயிரைக் கொடுக்கும் தோழர்களை உருவாக்கியவர்.
▪︎ அடிமைத்தனத்தை ஒழித்தவர், நிறவெறியை மாய்த்தவர்.
▪︎ மொழி வெறியை போக்கியவர்.
▪︎ மனிதநேயத்தை நிலைநாட்டியவர்.
▪︎ தன்னை பின்பற்ற அழைத்தவர், தன்னை வரம்பு மீறி புகழ்வதை தடுத்தவர்.
▪︎ தான் ஓர் இறை அடிமை என முழங்கியவர்.
▪︎ எனக்கு சிலையோ சமாதியோ கட்டக் கூடாது என்றவர்.
▪︎ விதவைக்கு வாழ்வு அளித்தவர்.
▪︎ ஆதரவற்றவர்களுக்கு உதவியவர்.
▪︎ இரக்க குணம் கொண்டவர்.
▪︎ மாபெரும் பேரரசை உருவாக்கியவர், உலகம் போற்றும் உத்தமர்.
▪︎ அனைத்து தலைவர்களாளும் பாராட்டப்படக் கூடியவர்.
▪︎ எதிரிகளாலும் மதிக்கப்பட்டவர்.
▪︎ எந்நேரமும் ஒலிக்கப்படும் நாமம் உடையவர்.
▪︎ 200 கோடி மக்களின் இதயங்களில் இடம் பிடித்தவர்.
200 கோடி மக்களால் பின்பற்றப்படக்கூடியவர்.
▪︎ இறையருளைப் பெறுவதையே இலட்சியமாகக் கொண்டவர்.
▪︎ ஒற்றுமையை வலியுறுத்தியவர், மனித சகோதரத்துவத்தை பேணியவர்.
▪︎ மாற்றாரையும் மதித்தவர், ஜீவராசிகள் மீது இரக்கம் கொண்டவர் நியாயத்திற்கு துணை நின்றவர், அநியாயத்தை எதிர்த்தவர்.
▪︎ படைத்தவன் திருப்திக்காக உற்றாரை பகைத்தவர்.
▪︎ ஓர் இறைக்கோட்பாட்டை உரக்கச் சொன்னவர்.
▪︎ புகழுக்குரியவர் என்ற பெயருடையவர்.
இவர்தான் முஹம்மது (அகிலத்தின் அருட்கொடை) புத்தகத்திலிருந்து…