ஸூரா அல்கியாமா(75:21~36)
—————————————————
அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்
- மறுமையை விட்டுவிடுகிறீர்கள்.
- அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.
- தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.
- சில முகங்கள் அந்நாளில் சோகமாக இருக்கும்.
- தமக்குப் பேராபத்து ஏற்படும் என அவை நினைக்கும்.
26 , 27. அவ்வாறில்லை! உயிர், தொண்டைக்குழியை அடைந்து விடும் போது “மந்திரிப்பவன் யார்?” எனக் கூறப்படும்.
- “அதுவே பிரிவு“ என்று அவன் விளங்கிக் கொள்வான்.
- காலோடு கால் பின்னிக் கொள்ளும்.
- அந்நாளில் இழுத்துச் செல்லப்படுவது உமது இறைவனிடமே.
- அவன் நம்பவுமில்லை. தொழவுமில்லை.
- மாறாக பொய்யெனக் கருதிப் புறக்கணித்தான்.
- பின்னர் தனது குடும்பத்தினரிடம் கர்வமாகச் சென்றான்.
- உனக்கு நெருங்கி விட்டது! இன்னும் நெருங்கி விட்டது!
- பின்னரும் உனக்கு நெருங்கி விட்டது! மேலும் நெருங்கி விட்டது!
- வெறுமனே விடப்படுவான் என்று மனிதன் எண்ணுகிறானா?
——————————
ஏகத்துவம்