மவ்லிதும் சீழ் நிரம்பிய உள்ளமும்
மவ்லிதில் கேடுகெட்ட கவிதை வரிகள்தான் நிரம்பிக் கிடக்கின்றன என்பதற்குச் சில சான்றுகளைப் பார்த்தோம்.
இந்த கேடுகெட்ட கவிதை வரிகள் நிறைந்த உள்ளத்தைப் பற்றி நபியவர்கள் கூறுவதைப் பாருங்கள். :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதரின் வயிற்றில் புரையோடும் அளவுக்குச் சீழ் சலம் நிரம்பியிருப்பது, அது கவிதையால் நிரம்பியிருப்பதை விட மேலானதாகும்.
(புகாரி 6154)
ஷைத்தானே மவ்லித் ஓதுகிறான்
அபூசயீத் அல்குத்ரீ (ரரி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘அல்அர்ஜ்’ எனுமிடத்தில் பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று” என்று கூறினார்கள்
(முஸ்லிம் 4548)
மவ்லித்கள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!
மாநபி (ஸல்) மவ்லிதையொட்டி இந்த (அல்மக்குல் முழஃப்ஃபர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அய்யிப்னு புக்தகீன்) மன்னர் ஏற்பாடு செய்த விருந்து வைபவத்தில் ஒரு முறை பங்கேற்றவர்களில் ஒருவர் கூறுகிறார். ”அவ்விருந்தில் சமைக்கப் பட்ட ஐயாயிரம் ஆட்டுத் தலைகள், பத்தாயிரம் கோழிகள்,
ஒரு இலட்சம் வெண்ணெய் பலகாரங்கள் முப்பதாயிரம் ஹல்வா தட்டைகள் இருந்தன. அந்த விருந்தில் ஞானிகள் மற்றும் சூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கெல்லாம் மன்னர், பொன்னாடைகள் போர்த்திக் கவுரவித்தார். மேலும் அன்பளிப்பு களும் வழங்கினார்.
லுஹர் முதல் சுபுஹ் வரை சூஃபிகளுக்காவே மன்னர் தனியாக ஒரு இசையரங்கம் ஏற்பாடு செய்தார். அதில் பாடப்பட்ட பேரின்பப்பாடல் கேட்டு குதித்துக் களித்த சூஃபிகளுடன் சேர்ந்து மன்னரும் பக்திப் பரவசத்துடன் ஆடினார். ஆண்டு தோறும் மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்ஃபர் மாநபி (ஸல்) மவ்துக்காகவே செலவிட்டார்.
(ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித், பக்கம்: 13)
இதிருந்தே இந்த மவ்துகள் தீனிக்காக உருவாக்கப்பட்டவைதான். இதற்கும் மார்க்கத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.