மீலாதும் மவ்லூதும் கூடாது* – தேவ் பந்த் மதரஸா ஃபத்வாவின் தமிழாக்கம்:

உலக அளவில் ஹனபி மத்ஹபை பின்பற்றும் மக்களின் தலைமைக் கல்விக்கூடமாக தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸா அமைந்துள்ளது. பல்லாயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் படித்து வரும் இம்மாபெரும் ஹனபி மத்ஹபின் பல்கலைக் கழக்மான இம்மதரஸா மீலாதும் மவ்லூதும் மார்க்கத்தில் கிடையாது அவ்லியாக்கலள் அதை ஓதச் சொல்லவில்லை என்று தேவ்பந்த் மதரஸா ஃபத்வா கொடுத்துள்ளது. நாங்கள் ஹனபிகள் என்று கூறிக் கொண்டு மேற்கண்ட செயல்களைச் செய்து வருவோர் இனியாவது இதில் இருந்து திருந்திக் கொள்வார்களா

அந்த ஃபத்வா வின் நகல் جامعہ دار العلوم دیوبند، ہندوستان
تخصص فی الفقہ والقضاء،
دار الافتاء والقضاء،
تاریخ:2 محرم 1426ھ

کاتب : مفتی حسن محمود صاحب

ஜாமிஆ தாருல் உலூம் தேவ்பந்த்,
இந்தியா (U.P).

இஸ்லாமிய பிக்ஹ் ஷரீஆ உயர்கற்கை நெறி மற்றும் மார்க்கத் தீர்ப்புப் பிரிவு,
தாருல் பத்வா (பத்வா குழு):

பத்வா வழங்கிய திகதி:
பிறை 2 முஹர்ரம் 1426 ஹிஜ்ரி.

பத்வா வழங்கியவர்:
முப்தி ஹசன் மஹ்மூத் ஸாஹிப்.

கேள்வி :-
ரபியுல் அவ்வல் மாதத்தில் குறிப்பாக பிறை 12 இல் மௌலூது ஓதுவது அந்நாட்களில் குறிப்பிட்ட கவிதை வரிகளை படிப்பது அனுமதிகபட்டதா? இல்லை அனுமதிக்கபடாததா? என்பதை தெளிவுபடுதவும்.

பதில் : –
அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது மீது சலாம் உண்டாவதாக.

நபி(ஸல்) அவர்களை பற்றி நினைவு கூறுவது,

இபாதத்களாகிய (வணக்கங்களாகிய) தொழுகை,நோன்பு,ஹஜ்,
ஜிஹாத் போன்ற காரியங்களாக இருந்தாலும் சரியே!

நடவடிக்கைகளான தூங்குவது,நடப்பது,எழுவது,அமர்வது ஆகியவைகளாகிய இருந்தாலும் சரியே!

நபி(ஸல்) அவர்களின் ஆடைகளை பற்றி குறிப்பதாக இருந்தாலும் சரியே!

நபி(ஸல்) அவர்களின் பிறப்பு மற்றும் குழந்தை பருவத்தை குறிப்பிடுவதாக இருந்தாலும் சரியே!

ஆக இது போன்ற அனைத்து காரியங்களிலும் நபி(ஸல்) அவர்களை நினைவு கூறுவதின் மூலம அறிவுறையையும்,படிப்பினையையும் பெறுவது நமக்கு நன்மையையும்,
பரக்கத்தையும் தருகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை .

இதுபோன்ற விடயங்களில் ஆதாரமற்ற தகவல்களையும்,
செய்திகளையும் மற்றும் குறிப்பிட்ட ஒருசில வழிமுறைகளையும் தவிர்ப்பது அவசியமாகும்.

ஏனெனில் மீலாது விழா நடத்துவதற்கு எவ்விதமான ஆதாரமும் இல்லை.

மேலும் இது வழிகெட்ட பித்அத் ஆகும்.
இந்த மீலாத் விழா மற்றும் மௌலூத் ஓதுவது குர்ஆன்,சுன்னாஹ்வில் இல்லாத ஒன்றாகும்.

மேலும், சஹாபாக்கள்,தாபியீன்கள்,
தபஉத் தாபியீன்கள் ஆகியவரிடமிருந்தும் எவ்வித ஆதாரமும்
கிடைக்கப் பெறவில்லை.

ஹிஜ்ரி 600 ஆண்டு வரைக்கும் இந்த உம்மத்தில் மீலாத் என்கின்ற ஒரு நிகழ்வே இல்லாத நிலையில் இருந்தது.

இது ஹிஜ்ரி 600 ஆண்டுகளுக்கு பிறகுதான் புதிதாக உதயமானது.

மீலாதை ஆரம்பிக்கும் போது இதை எதிர்பதற்காக “அல்லாமா இப்னு அமீர் அல் ஹஜ் மக்கி (ரஹ்)” அவர்கள் தன்னுடைய “அல்-மத்கள்” என்ற நூலில் விரிவான ஆதாரங்களை கொண்டு இந்த மீலாத் விழாவிற்கு மறுப்பு அளித்தார்கள்.

இன்று வரையிலும் சத்தியத்தில் உள்ள இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் இந்த மீலாத்தை எதிர்த்து கொண்டே தான் வருகின்றனர்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed