பாவம் செய்தவருக்கு ஜனாஸா தொழுகை…..
இறைவனுக்கு இணை கற்பித்தல், அல்லாஹ்வை மறுத்தல், தற்கொலை செய்தல் ஆகிய மூன்று குற்றங்கள் தவிர மற்ற குற்றங்கள் செய்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாம்.
கைபர் போரில் ஒருவர் மரணித்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘உங்கள் தோழர் அல்லாஹ்வின் பாதையில் போரிடும் போது மோசடி செய்து விட்டார். எனவே உங்கள் தோழருக்கு நீங்கள் தொழுகை நடத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். அவரது பொருட்களை நாங்கள் தேடிப் பார்த்தோம். (எதிரிப் படையினரான) ஒரு யூதருக்குச் சொந்தமான இரண்டு திர்ஹம் மதிப்பு கூட இல்லாத ஒரு மாலையை அவரது பொருட்களுடன் கண்டோம்.
அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)
நூல்கள்: நஸயீ 1933, அபூ தாவூத் 2335
விபச்சாரம் செய்த பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய பின் அவருக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தியுள்ளார்கள்.
நூல்: முஸ்லிம் 3209
எனவே ஒருவர் பாவம் செய்திருக்கிறார் எனக் காரணம் காட்டி அவருக்காக ஜனாஸா தொழுகை மறுக்கப்படக் கூடாது.