\\*ஷைத்தானின் தூண்டுதலை விட்டும் பாதுகாப்பு பெற…\\*
சகல வல்லமையும் படைத்த இறைவனிடத்தில் கையேந்தி பாதுகாப்புத் தேடுமாறு திருக்குர்ஆன் நமக்குக் கற்றுத்தருகிறது.
*ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக!* அவன் செவியுறுபவன்; அறிந்தவன். அல்குர்ஆன் (7 : 200)
*ஷைத்தானிடமிருந்து உமக்கு ஏதும் தீண்டுதல் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக*! அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் (41 : 36)
“*என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்*” என்றும் “*என் இறைவா! என்னிடம் அவர்கள் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்*.” என்றும் கூறுவீராக! அல்குர்ஆன் (23 : 97)
(முஹம்மதே!) மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் *மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்* என்று கூறுவீராக! அல்குர்ஆன் (114)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறு) பிரார்த்திப்பார்கள். இறைவா உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து மரணிப்பதை விட்டும் இடிபாடுகளுக்குள் சிக்கி மரணிப்பதை விட்டும் நீருக்குள் மூழ்கி மரணிப்பதை விட்டும் நெருப்பில் கருகி மரணிப்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
*மரண வேளையில் ஷைத்தான் என்னை தீண்டுவதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.* உன்னுடைய வழியை விட்டு புறக்கணித்தவனாக நான் மரணிப்பதை விட்டும் (விஷ ஜந்துக்களால்) தீண்டப்பட்டு மரணிப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
அறிவிப்பவர் : அபுல் யசர் (ரலி); நூல் : நஸயீ 5436