வீட்டை விட்டு வெளியேறும் போது ஒதும் துஆ
நபி (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது
பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்.
என்ற துஆவை ஓதுவார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அபூதாவுதில் இடம்பெறும் செய்தி. இந்தச் செய்தியின் அறிவிப்பாளரில் ஒருவராக இடம் பெறும் இப்னு ஜுரைஜ் என்பவர் தத்லீஸ் (இருடிப்பு) செய்பவர் என்று விமர்சிக்கப்பட்டவர்.
அதாவது அடுத்தவரிடம் நான் கேட்டேன் என்பது போன்ற தெளிவான வாசகங்கள் கூறாமல் அவர் வழியாக அறிவிக்கிறேன் என்ற வார்த்தையை பயன்படுத்தியே கூறியுள்ளார்.