தாயின் காலடியில் சொர்க்கமா ?

ஜாஹிமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் போர் செய்ய நாடுகிறேன். இது தொடர்பாக உங்களிடம் ஆலோசிக்க வந்துள்ளேன் என்று கூறினார்கள். உமக்கு தாய் இருக்கிறார்களா? என்று கேட்டார்கள். அவர்கள் ஆம் என்றார்கள். அவர்களை

அவசியமாக்கிக் கொள். ஏனெனில் சொர்க்கம் அவளின் (தாயின்) பாதங்களுக்கு கீழ் உள்ளது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஜாஹிமா,

நூல் : நஸாயீ (3053)

இதே செய்தி இப்னுமாஜா (2771),ஷுஅபுல் ஈமான்லிபைஹகீ, பாகம்:16, பக்கம் :340,341, முஃஜமுல் கபீர்லி தப்ரானீ, பாகம்:2, பக்கம் : 418,ஹாகிம் 2502,7248, ஸுனஸ் ஸுக்ரா லி நஸாயீ (3067), மஃரிபத்துஸ் ஸஹாபா அபூ நுஐம் உஸ்பஹானீ (5494) ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.

முஃஜமுல் கபீர்லி தப்ரானீ, பாகம்:2, பக்கம் : 418, மஃரிபத்துஸ் ஸஹாபாலி அபூநுஐம் உஸ்பஹானீ (5494) ஆகிய இரு நூல்களைத் தவிர மற்ற அனைத்து நூல்களிலும் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மானின் மகன் முஹம்மத் பின் தல்ஹா என்பவர் இடம்பெற்றுள்ளார்.

இந்த முஹம்மத் பின் தல்ஹா என்பவரை யாரும் நம்பகமானவர் என்று கூறவில்லை. இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் நம்பகமானவர் என்ற தமது நூலிலில் இவரை பதிவுசெய்துள்ளார்கள்.

இமாம் இப்னுஹிப்பான் அவர்கள் ஒருவரை யாரும் குறைகூறவில்லையானால் அவரை நம்பகமானவர் பட்டியலிலில் சேர்ப்பது அவரின் வழக்கமாகும்.

எனவே இமாம் இப்னு ஹிப்பான் மட்டும் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அதை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்க மாட்டார்கள்.

எனவே இந்த முஹம்மத் பின் தல்ஹா என்பவர் யாரென அறியப்படாதவர் என்ற நிலையில் பலவீனமானவராகிறார்.

தாய்மார்களின் பாதங்களுக்கு கீழ் சொர்க்கம் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின்மாலிலிக் (ரலி),

நூல்:முஸ்னத் ஷிஹாப் (113)

இதே செய்தி அபூஷைக் அல்உஸ்பஹானீ அவர்களுக்குரிய அல்பவாயித் (ஹதீஸ் எண் : 25), இதே ஆசிரியரின் தபாத்துல் முகத்திஸீன், பாகம் :4, பக்கம்: 19 ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.

இச்செய்தியில் இடம்பெறும் மன்சூர் பின் முஹாஜிர், அபுந் நள்ர் அல்அபார் என்ற இருவரும் யாரென அறியப்படாதவர்கள். இவர்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed