*வியக்க வைக்கும் மாமனிதரின் தூய வாழ்வு* *(அவர்கள் மீது அல்லாஹ் சிறப்பருள் புரியட்டும்)*

———————————————-

நபிகள் நாயகம் கொண்டு வந்த இந்த மார்க்கத்தை பொய்ப்பிக்க அன்றைய மக்கத்து எதிரிகள் பல பல விமர்சனங்களை அவர் மீது முன்வைத்தனர்.

*பைத்தியம்* என்றனர்,

*பொய் சொல்கிறார்* என்றனர்.

அவருக்கு யாரோ *சூனியம் செய்து விட்டனர* என்றனர்

அவரே ஒரு *சூனியக்காரர்* என்றனர்.

*கல்லால் அடித்து விரட்டினர்.*

*ஒட்டகத்தின் குடலையும் கழிவையும்* அவர் மீது வீசியெறிந்து இழிவு செய்ய முனைந்தனர்.

ஒரு கட்டத்தில் அவருடைய தலைக்கு விலையும் பேசினர்.

உயிர் வாழவே இயலாத சூழல் வந்த போது தமது சொந்த நாட்டை விட்டும் அகதியாக வெளியேறினார்கள்.

*இத்தனையையும் அந்த எதிரிகள் செய்ததினுடைய நோக்கம் ஒன்றே ஒன்று தான்.*

அவரை பொய்ப்பித்து விட்டால்,

அல்லது அவரை துரத்தியடித்து விட்டால்

அவரை அவமானப்படுத்தி விட்டால்,

அவரை கொலை செய்து விட்டால்..

*இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தி விடலாம்* என்பதே அவர்களின் திட்டம்.

ஆனால் இத்தனையையும் செய்த அவர்கள் வரலாற்றின் எந்தவொரு இடத்திலும் *இம்மானிதரின் ஒழுக்க வாழ்வைப்* பற்றியோ,

அன்னாரின் *நேர்மை, நாணயம் பற்றியோ குறை கூறியதில்லை.*

இஸ்லாத்தை ஏற்காத யூதர்கள் கூட அந்த காலத்தில், தங்களுக்கிடையேயான சிறு சிறு பிரச்சனைகளை நபிகள் நாயகத்திடம் வந்து முறையிட்டு தீர்வு காணக் கூடியவர்களாக இருந்தனர்.

அந்த அளவிற்கு மகத்தான நம்பிக்கையையும். நன்மதிப்பையும் அந்த சமூகத்தில் சம்பாதித்தவர் தான் *எங்கள் உயிரிலும் மேலானவர்*

இன்றைக்கு மாமனிதரை ஒழுக்க வாழ்வை கொச்சைப்படுத்திப் பார்க்கும் தற்குறிகளைப் போன்ற,

*இவர்களை விடவும் பன்மடங்கு கொடிய மனம் படைத்தோர் நபி வாழும் காலத்தில்,* மக்காவில் ஆட்சி, அதிகாரம் படைத்தவர்களாக இருந்தனர்.

ஆனால், *அவர்கள் ஒருவர் கூட, நபியின் ஒழுக்கத்தை கேள்விக் குறியாக்கியதில்லை.*

______________________________

*MuhammadMercyForMankind*

*SpreadTeachingsOfProphet*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *