மையவாடியில் (கப்ர்) ஜனாஸா தொழுகை நடத்தலாமா❓
நபி (ஸல்) அவர்கள் தனியாக இருந்த ஒரு கப்ருக்கருகே சென்று (ஜனாஸாவுக்காகத்) தொழுகை நடத்தினார்கள். மக்களும் அணி வகுத்து நின்றனர்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புஹாரி : 857
பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த கரு நிறமுடைய ஓர் ஆணோ பெண்ணோ இறந்துவிட்டார். அவர் இறந்துவிட்ட செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாமலிருந்தது. ஒரு நாள் திடீரென்று அவர் பற்றி நினைவு வந்ததும் நபி (ஸல்) அவர்கள், ‘அவர் என்ன ஆனார்?’ எனக் கேட்டார்கள். அதற்கு (தோழர்கள்) ‘இறைத்தூதர் அவர்களே! அவர் மரணித்துவிட்டார்!” என்றதும் ‘எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?’ எனக் கேட்டனர். தோழர்கள்,
அவரைப் பற்றி அந்தஸ்துக் குறைவாகக் கருதி, ‘அவர் இன்னின்னவாறெல்லாம் இருந்தார்’ எனக் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘அவரின் கப்ரை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறி, கப்ருக்கு வந்து (ஜனாஸாத்) தொழுதார்கள்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)
புஹாரி :1337