*மாமனிதரின் உயரிய பண்புகளில் சில… *
———————————————
(1) கதீஜா (ரலி) அவர்கள்: (ஹதீஸின் சுருக்கம்)
தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்
(சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்
வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்
விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்
உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்
நூல்: புஹாரி 3
—————————————-
(2) நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்களின் குணத்தை பற்றி எனக்கு சொல்லுங்கள் என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது, என்று கூறினார்கள்
அறிவிப்பாளர்: ஷஅத் பின் ஹிஸாம்; நூல்: அஹ்மத் 24139
———————————————
Muhammad_Mercy_For_Mankind