மவ்லித் – யூத கிறிஸ்தவக் கலாச்சாரம்!
உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கு என்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நாங்கள், ”அல்லாஹ்வின் தூதரே! யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”வேறெவரை?” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 3456
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தது போன்றே இன்று முஸ்ம்களிடம் பிறந்த நாள் கொண்டாடுதல், இறந்த நாள் அனுஷ்டித்தல் போன்ற காரியங்கள் ஏற்பட்டு விட்டன. உண்மையில் பிறந்த நாள் விழா, இறந்த நினைவு தினம் எல்லாமே யூத, கிறித்தவ கலாச்சாரமாகும். இது இஸ்லாமிய கலாச்சாரம் கிடையாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்கு முந்தைய நபிமார்கள், நல்லடியார்கள் யாருக்கும் பிறந்த நாள் விழா எடுத்தது கிடையாது. யாருடைய இறந்த தினத்தையும் அனுசரித்தது கிடையாது. நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு நபித்தோழர்களின் காலத்திலும் இந்தக் கலாச்சாரம் தோன்றவில்லை. சிறந்த தலைமுறையினரான அவர்களிடம் இல்லாத ஒரு புதிய செயலை வணக்கம் என்ற பெயரில் இன்றைக்கு முஸ்லிம்கள் தங்களுக்கு மத்தியில் புகுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது யூத, கிறித்தவ கலாச்சாரமாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.
ﻣَﻦْ ﺗَﺸَﺒَّﻪَ ﺑِﻘَﻮْﻡٍ ﻓَﻬُﻮَ ﻣِﻨْﻬُﻢْ ﺭﻭﺍﻩ ﺃﺑﻮ ﺩﺍﻭﺩ
It was narrated that ‘Abd-Allaah ibn ‘Umar said: The Prophet (peace and blessings of Allaah be upon him) said: Whoever imitates a people is one of them.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவுத் (3512)
பிற மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதை நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸ் மூலமும், இன்னபிற கட்டளைகளின் மூலமும் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். இது போன்ற காரியங்களை ஒரு போதும் செய்யக் கூடாது என்று நபித்தோழர்களைத் தடுத்திருக்கின்றார்கள்.
நபியவர்கள் வெறுத்த மவ்லித்
”கிறித்தவர்கள் மர்யமின் மகன் ஈஸாவை (கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியான் தான். (என்னைப் புகழ்வதாயிருந்தால்) ‘அல்லாஹ்வின் அடியார்’ என்றும் ‘அல்லாஹ்வின் தூதர்’ என்றும் கூறுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: புகாரி 3445, 6830
ஆனால் இவ்வளவு எச்சரித்த பிறகும் இன்றைய மவ்லிது கிதாபுகளில் நபி (ஸல்) அவர்களைக் கடவுளாக்கும் ஷிர்க்கான கவிதைகள் ஏராளமாக நிறைந்து காணப்படுகின்றன. நபியவர்களை மனிதர் என்ற நிலையிருந்து உயர்த்தி அப்பட்டமாகக் கடவுள் நிலைக்குக் கொண்டு செல்லும் நாசக் கருத்துக்களை இந்த மவ்துகள் தாங்கி நிற்கின்றன.
ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
என்னுடைய திருமணத்தின் காலை வேளையிலே நபியவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது எனக்கருகில் இரண்டு சிறுமிகள் பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்களுடைய தந்தைமார்களைப் பற்றி இரங்கற்பாட்டு பாடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பாடும் போது அதில், ”எங்களிலே ஒரு நபியிருக்கின்றார்.
அவர் நாளை நடப்பதையெல்லாம் அறிவார்” என்று பாடினார்கள். உடனே நபியிவர்கள், ”இவ்வாறு பாடாதீர்கள். நாளை நடப்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.
நூல்: இப்னுமாஜா 1887
இறைவனுக்கு மட்டுமே உரிய ஒரு பண்பை அவனல்லாதவர்களுக்கு இருப்பதாகக் கூறுவது இறைவன் மன்னிக்காத இணை கற்பிக்கும் பாவமாகும். இதன் காரணமாகத் தான் நபியவர்கள் அவ்வாறு பாடிய சிறுமிகளைத் தடுக்கின்றார்கள்.
ஆனால் மவ்லித் உள்ளதைப் பாருங்கள் :
عَالِمُ سِرٍّ وَأَخْفى مُتْسَجِيْبُ الدَّعَوَاتِ
அகமிய ரகசியம் அறிபவரே, ஆழிய மர்மம் அறிபவரே, அகமுணர்ந் திரங்கும் இறைஞ்சல்களை அன்பாய் ஏற்றுக் கொள்பவரே.َ
لسَّلام عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ
நோய்களைக் குணமாக்குபவரே நும் மீது ஸலாம்
*இன்ஷா அல்லாஹ்* தொடரும்