மவ்லித்கள் புகழ் மாலைகளல்ல, பொய் மாலைகள் தான்!
நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் பிறந்ததும் மலக்குகள் கெண்டியில் தண்ணீர், மாணிக்கங்கள், மரகதங்கள், முத்துக்களால் பதிக்கப் பட்ட தட்டுகளையும் தாம்பூலங்களையும் சுமந்து வந்து நபி (ஸல்) அவர்களின் பளிங்கு போன்ற இதயத்தைக் கழுவி தூதுவர் என்று முத்திரையிடுகின்றார்கள்.
இந்நேரத்தில் ரஹ்மான் மலக்குகளை அழைத்து அவரைத் தூக்கிக் கொண்டு, அர்ஷ் மற்றும் விரிவான சுவனபதிகளை சுற்றி வலம் வாருங்கள் என்று சொன்னான். (மவ்லித்)
மேற்கண்டவாறு பல்வேறு பொய்கள் மௌதில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு எந்த ஹதீஸிலும் நபியவர்கள் கூறவில்லை
”என் மீது எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டிக் கூறுவானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 108, 1291
”என் மீது பொய் சொல்வ தென்பது வேறு யார் மீதும் பொய் சொல்வதைப் போன்றதல்ல. என் மீது வேண்டுமென்று பொய் சொல்பவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர் : முகீரா (ரலி)
நூல் : முஸ்லிம் 6
நபியவர்களை இழிவுபடுத்திய மவ்லித்
திருக்குர்ஆனில் நபி (ஸல்) அழைத்துக் கூப்பிடும் ஒழுங்கைப் பற்றிக் கூறுகையில்,
உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப் போல் இத்தூதரை அழைக்காதீர்கள்
(அல்குர்ஆன் 24:63)
இந்த வசனம் இறங்கியதற்கான காரணத்தை அப்பாஸ் (ரலீ) அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள். ”அரபு மக்கள் ‘யா முஹம்மத், யாஅபல் காசிம்’ என்று கூறிக் கொண்டு இருந்தார்கள். அப்போது தான் நபியவர்களைக் கண்ணியத்தைப் பாதிக்கும் வகையில் அவ்வாறு கூறக் கூடாது என அல்லாஹ் அவர்களைத் தடுக்கிறான்” என கூறுகிறார்கள்.
(தஃளீம் கத்ரிஸ் ஸலா பாகம் : 1 பக்கம் : 85)
ஆனால் மௌதில் யாநபி பாடல் ஏழாவது அடியில் ”யா முஹம்மத்” என்று நபியவர்களின் பெயரைச் சொல் மிகவும் விகாரமாகவே மரியாதையில்லாமல் அழைக்கப்படுகிறது. அது போன்ற அஸ்ஸலாமு அலைக்கும் பைத்தில் நபியவர்களை அஹ்மத் என்று பெயர் கூறி அழைத்து இழிவுபடுத்தியுள்ளனர்.