நூஹ்

 

ஆதம், இத்ரீஸ் தவிர குர்ஆனில் கூறப்பட்ட மற்ற எல்லா நபிமார்களுக்கும் இவர் முந்தியவராவார் – 4:163, 6:84

 

கப்பலில் ஏற்றப்பட்டு இவரும் இவரை ஏற்றவர்களும் காப்பாற்றப்பட்டனர். ஏற்க மறுத்தவர்கள் அழிந்து போயினர் – 7:64, 10:73, 11:37-48, 21:76,77, 23:27, 25:37, 26:119, 54:10-15, 69:11

 

முழு உலகும் அழிக்கப்பட்டும் என்பதால் எல்லா உயிரினங்களிலிருந்தும் ஒரு ஜோடியைக் கப்பலில் ஏற்றிக் கொண்டார் – 11:40, 23:27

 

அவரது மகன் அவருக்கு எதிரணியில் இருந்தான். அவனை அவரால் காப்பாற்ற இயலவில்லை – 11:42,43, 23:27

 

அக்கப்பல் ஜுதி மலை மீது நிலை கொண்ட பின் தண்ணீர் வடிந்தது – 11:44

 

இவர் 950 வருடங்கள் வாழ்ந்தார் – 29:14

 

அக்கப்பலை இறைவன் அகிலத்துக்கு அத்தாட்சியாக்கினான் – 23:30, 25:37, 26:121, 29:15, 54:15

 

அவரது மனைவியும் அவரை ஏற்கவில்லை. இதனால் அவளை அவரால் காப்பாற்ற முடியாது – 66:10

 

அவர் சமுதாயத்தினரிடம் பட்ட கஷ்டங்கள் – 7:60-64, 10:71, 11:27-32, 11:38, 23:24,25, 26:111, 26:116, 54:9, 71:5,6,7, 71:22,23

 

நூஹ் பிரார்த்தனை செய்த பின்னர் அழிக்கப்பட்டனர் – 21:76, 23:26, 26:117,118, 37:75, 71:26

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *