நபி (ஸல்) அவர்கள் கேட்ட துஆக்கள்
ஈருலக நன்மை பெற
(அல்குர்ஆன்:2:201.)
கவலைகள் தீர
“எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் – அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி.”
(அல்குர்ஆன்:9:129.)
கல்வி அறிவுப் பெருக
“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!”
(அல்குர்ஆன்:20:114.)
நிராகரிப்பவர்களுக்க எதிராக நாம் வெற்றி பெற
“என் இறைவா! சத்தியத் தீர்ப்பு வழங்குவாயாக! என்று கூறினார். எங்கள் இறைவனோ அறவற்ற அருளாளன். நீங்கள் வர்ணிப்பதற்கு எதிராக உதவி தேடப்படுபவன்.”
(அல்குர்ஆன்:21:112.)
மறுமையில் அதிகமான நற்கூலி பெற
“அவர்கள் வர்ணிப்பதை விட்டும் கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன்.
மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக.
வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீம் (இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்).”
(அல்குர்ஆன்:37:180,181,182.)
பிரயாண துஆ
“இதன் மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித்தந்த அ(வ் விறை)வன் மிக்க பரிசத்தமானவன்.
‘மேலும், நிச்சயமாக நாம் எங்கள் இறைவனிடத்தில் திரும்பிச் செல்பவர்கள்.”
(அல்குர்ஆன்:43:13,14.)
இறை நம்பிக்கை அதிகமாக
“அவன் தான் அல்லாஹ் – என்னுடைய இறைவன்; அவன் மீதே நான் முற்றும் நம்பிக்கை வைக்கிறேன்; அன்றியும் அவன் பக்கமே நான் திரும்புகிறேன்.”
(அல்குர்ஆன்:42:10.)
விசுவாசிகள் அனைவரும் மன்னிக்கப் பெற
”என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும் முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக!
(அல்குர்ஆன்:71:28.)