நபி ஸக்கரிய்யா (அலை) அவர்கள் கேட்ட துஆ

குழந்தைப்பேறு பெற

இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”

(அல்குர்ஆன்:3:38.)

குழந்தை பாக்கியம் பெற

“என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த உரிமையாளன்” என்று ஸக்கரிய்யா தமது இறைவனை அழைத்தபோது, அவருக்காக (அவரது பிரார்த்தனையை) ஏற்றோம். 

(அல்குர்ஆன்:21: 89.)

நபி சுலைமான் (அலை) அவர்கள் கேட்ட துஆ

நற்செயல்கள் அதிகமாக

“என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!” என்றார்.

(அல்குர்ஆன்:27:19.)

நபி லூத் (அலை) அவர்கள் கேட்ட துஆ

தீய செயல்களிலிருந்து பாதுகாப்புப் பெற

என் இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக!”

(அல்குர்ஆன் 26: 169)

அல்லாஹ்வின் உதவி பெற

“என் இறைவனே! குழப்பம் செய்யும் இற்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!”

(அல்குர்ஆன்:29:30.)

நபி யூனூஸ் (அலை) அவர்கள் கேட்ட துஆ

துன்பத்திலிருந்து விடுபட

“உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்” என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார்.

(அல்குர்ஆன்:21:87.)

நபி அய்யூப் (அலை) அவர்கள் கேட்ட துஆ

நோய் குணமடைய

“நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்.”

(அல்குர்ஆன்:21:83.)

நபி ஹூத் (அலை) அவர்கள் கேட்ட துஆ

அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெற

“நிச்சயமாக நான்> எனக்கும் உங்களுக்கு இறைவனாக இருக்கும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டேன்; எந்த உயிர்ப் பிராணியாயினும் அதன் முன்நெற்றி உரோமத்தை அவன் பிடித்தவனாகவே இருக்கின்றான்; நிச்சயமாக என் இறைவன் நேரான வழியிலிருக்கின்றான்.”

(அல்குர்ஆன்:11: 56.)

நபி யஃகூப் (அலை) அவர்கள் கேட்ட துஆ

துன்பங்களிலிருந்து பாதுகாப்புப் பெற

“பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிக்க கிருபையாளனாவான்”

(அல்குர்ஆன்:12: 64.)

அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கை வலுப்பட

“அவன் மீதே நான் முழமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, முழமையாக நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே முழு நம்பிக்கைவைப்பார்களாக!”

(அல்குர்ஆன்:12: 67.)

சஞ்சலம் நீங்கிட

”என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின்றேன்’.

(அல்குர்ஆன்:12: 86.)

மறுமையில் நல்லடியார்களுடன் எழுப்பப் பட

“வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லீமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!”

(அல்குர்ஆன்:12:101.)

நபி நூஹ் (அலை) அவர்கள் கேட்ட துஆ

துஆவில் தவறுகள் நடக்காமல் இருக்க

“என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்.”

(அல்குர்ஆன்:11: 47.)

தங்குகின்ற இடத்தில் நிம்மதியான சூழ்நிலை ஏற்பட

“இறைவனே! நீ மிகவும் பாக்கியம் உள்ள – இறங்கும் தலத்தில் என்னை இறக்கி வைப்பாயாக! நீயே (பத்தரமாக) இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன்.”

(அல்குர்ஆன்:23:29.)

நபி ஷுஐபு (அலை) அவர்கள் கேட்ட துஆ

மாற்று சமயத்தவர்களுடன் நல்லுறவு ஏற்பட

“எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக – தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்.”

(அல்குர்ஆன்:7: 89.)

அல்லாஹ்வின் உதவி பெற

“மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன்; இன்னும் அவன் பாலே மீளுகிறேன்.”

(அல்குர்ஆன்:11:88.)

நபி ஈஸா (அலை) அவர்கள் கேட்ட துஆ

விசாலமான உணவைப் பெற

“அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக. அது எங்களுக்கு – எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக. நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்”

(அல்குர்ஆன்:5: 114.)

நபி மூஸா (அலை) அவர்கள் கேட்ட துஆ

கல்வி ஞானம் பெற

“அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.”

(அல்குர்ஆன்:2:67.)

இறைவனின் தண்டனையிலிருந்து பாதுகாப்புப் பெற

“நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்.”

”இன்னும் இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்”

(அல்குர்ஆன்:7:155,156.)

சோதனையின்போது பொறுமை ஏற்பட

“எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!”

(அல்குர்ஆன்:7:126.)

சகோதரருக்கு துஆ

“என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் மன்னிப்பாயாக! உன் ரஹ்மத்தில் (நற்கிருபையில்) – பிரவேசிக்கச் செய்வாயாக! ஏனெனில், நீயே கிருபையாளர்களிலெல்லாம், மிக்க கிருபையாளன்.”

(அல்குர்ஆன்:7:151.)

நெஞ்சம் விரிவடைய

“இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக! என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!”

(அல்குர்ஆன்:20:25, 26.)

அநியாயக்காரர்களிடம் இருந்து பாதுகாப்புப் பெற

“என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!”

”என் இறைவா! என் மீது நீ அருள்புரிந்ததன் காரணமாக, நான் இனி ஒரு போதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்க மாட்டேன்”

”என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!”

(அல்குர்ஆன்:28:16,17, 21.)

வலிமை ஏற்பட

“என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்”

(அல்குர்ஆன்:28:24.)

நபி ஆதம் (அலை) அவர்கள் கேட்ட துஆ

பாவமன்னிப்புப் பெற

“எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்;டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”

(அல்குர்ஆன்:7: 23.)

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட துஆ

துஆக்கள் ஏற்கப்பட

“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”

(அல்குர்ஆன்:2:127-128.)

படைத்தவனிடம் சரணடைந்திட

“வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் முஷ்ரிக்கானவனாக – (இணைவைப் போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்”

(அல்குர்ஆன்:6:79.)

குழப்பங்களில் இருந்து நேர்வழி பெற

“நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்.”.

(”என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!”

”எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக.”

(அல்குர்ஆன் 14: 39, 40, 41)

கோரிக்கை ஏற்கப்பட

“எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய்! இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை.”

(அல்குர்ஆன்:14:38.)

இம்மை மறுமை உயர்பதவி பெற

‘‘இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!””

”இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”

“இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”

”என் தந்தையாரையும் மன்னிப்பாயாக! நிச்சயமாக, அவர் வழி கெட்டவர்களில் (ஒருவராக) இருக்கிறார்.””

”இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக் குள்ளாக்காதிருப்பாயாக!”

”அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.””

”எவரொருவர் பரிசத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).”

(அல்குர்ஆன்:26: 83 -89.)

நிராகரிப்பவர்களின் பிடியில் சிக்காமல் இருக்க

“எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,”

”எங்கள் இறைவா! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்”

(அல்குர்ஆன்:60:4,5.)

சாலிஹான குழந்தை பிறக்க

“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக”

(அல்குர்ஆன்:37:100.)

 

 

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed