ஜின்களுக்கு அஞ்சுவது அறியாமையாகும்
எந்த ஒரு தீங்கும் இறைவனுடைய நாட்டம் இல்லாமல் நமக்கு ஏற்படாது. இதை ஒவ்வொரு முஸ்லிமும் மனதில் பதிய வைத்துக்கொண்டால் கோழையாக மாட்டான். அஞ்சக்கூடாத படைப்புகளுக்கு அஞ்சமாட்டான்.
ஜின்களுக்கு வழங்கப்படாத அதிகாரங்கள் இருப்பதாக நினைத்து ஒருவன் ஜின்களுக்கு பயப்படுவது மூடநம்பிக்கையாகும். அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே நாம் பயந்து வாழ வேண்டும்.
ஷைத்தானே, தனது நேசர்களை (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் எனக்கே அஞ்சுங்கள்!
அல்குர்ஆன் (3 : 175)
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்!
அல்குர்ஆன் (3 : 102)
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வ