ஜின்களில் இறைமறுப்பாளர்கள் உண்டு
ஜின்களில் இறைவனை நம்பியோரும் இறைவனை நிராகரிப்பவர்களும் உண்டு. இந்த உலகத்தில் இறைமறுத்தோராக இருந்தோம் என்று கெட்ட ஜின்கள் மறுமை நாளில் தங்களுக்கு எதிராக சாட்சி கூறும்.
ஜின் மற்றும் மனித சமுதாயமே! “உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக் கூறி இந்த நாளை நீங்கள் சந்திக்க விருப்பதை உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் தூதர்கள் உங்களில் இருந்து உங்களிடம் வரவில்லையா?” (என்று இறைவன் கேட்பான்).
“எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வுலக வாழ்வு அவர்களை மயக்கி விட்டது. (ஏக இறைவனை) மறுத்தோராக இருந்தோம் எனத் தங்களுக்கு எதிராக அவர்கள் சாட்சியமளிப்பார்கள்.
அல்குர்ஆன் (6 : 130)