ஜின்களின் உணவு
மனிதர்கள் உண்டுவிட்டு எரியும் எலும்புகளும் கால்நடைகளின் சாணங்களும் கரிக்கட்டைகளும் ஜின்களின் உணவாகும். சாப்பிடுவதற்கு இவற்றில் ஒன்றுமில்லையே என்று நமக்குத் தோன்றினாலும் ஜின்களுக்கு அதில் அல்லாஹ் நிறைவான உணவை வைத்துள்ளான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னிடம் “நஸீபீன்’ என்னுமிடத்தைச் சேர்ந்த ஜின்கüன் குழு ஒன்று வந்தது. அவை நல்ல ஜின்களாயிருந்தன. அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான், “அவை எந்த எலும்பையும் எந்த கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று அல்லாஹ்விடம் அவற்றுக்காகப் பிரார்த்தித்தேன்.”என்று பதிலüத்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (3860)
ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட) உணவு குறித்துக் கேள்வி கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் பெயர் சொல்லிலி அறுக்கப்பட்ட ஒவ்வொரு பிராணியின் எலும்பும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். அது உங்கள் கரங்களில் இறைச்சியைவிட நிறைவானதாக இருக்கும். ஒவ்வொரு கெட்டிச் சாணமும் உங்களுடைய கால்நடைகளுக்குத் தீவணமாகும்”
என்று கூறினார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), “எனவே, நீங்கள் (இயற்கைக் கடனை நிறைவேற்றிய பின்பு எலும்பு, கெட்டிச் சாணம் ஆகிய) அவ்விரண்டின் மூலம் துப்புரவு (இஸ்தின்ஜா) செய்யாதீர்கள்; அவ்விரண்டும் உங்களுடைய சகோதரர்க(ளான ஜின்க)ளின் உணவாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல் : முஸ்லிம் (767)
ஜின்கள் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து முஹம்மதே எழும்பு கெட்டிச் சாணம் கறிக்கட்டை ஆகியவற்றால் துப்புரவு செய்வதை விட்டும் உங்கள் சமுதாயத்தினரை தடுங்கள். ஏனென்றால் இவற்றில் தான் அல்லாஹ் எங்களுக்கு உணவை ஏற்படுத்தியிருக்கிறான் என்று கூறின. ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதனை தடுத்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
அபூதாவுத் (35)