*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

நாள்: *02-10-24*

||*கேள்வி 02*||

[ஆலு இம்ரான்

(அத்தியாயம் *3* வசனம் *31-40* வரை)]

—————————–

A) *நாம் அல்லாஹ்வை நேசிக்கின்றோம் என்றாலும் அல்லாஹ் நம்மை நேசிக்க வேண்டும்* என்றாலும் அதற்கான நிபந்தனை என்ன?

B) *ஸகரிய்யா நபி செய்த பிரார்த்தனை என்ன*? அதற்கு வானவர் அவரை அழைத்து சொன்ன *சுபச் செய்தி என்ன?*

C) *பிறக்கும் போது சைத்தானின் தீண்டுதலில் பாதுக்காக்கப்பட்ட இரு குழந்தைகள் யார்*? இந்த பிரார்த்தனையை  செய்தவர் யார்?

D) *அல்லாஹ், அகிலத்தார்களைக் காட்டிலும் (முன்னுரிமை வழங்கி தனது தூதுப் பணிக்காக) யாரை தேர்ந்தெடுத்துக் கொண்டான்*.?

———————————–

A) இறைத்தூதர்களை ( நபி (ஸல்) அவர்களை) பின்பற்ற வேண்டும்

*நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்* என்று கூறுவீராக ( 3:31)

_________________________

B) தூய சந்ததிக்காக( குழந்தை) பிரார்த்தித்தார். அவருக்கு யஹ்யா (அலை) எனற ஆண் மகனை வழங்குவதாக மலக்குகள் மூலம் சுபச் செய்தி வழங்ப்பட்டது

*இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்*’ என்று தம் இறைவனிடம் வேண்டினார். (3.38)

_________________________

யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். *அல்லாஹ்வின் வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடு மிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார்*” என்று வானவர்கள் அவரை அழைத்துக் கூறினர். (3:39)

_________________________

C) மர்யம்(அலை) அவர்களும் & அவருடைய மகன் ஈஸா ( அலை) அவர்களும்

ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும்போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். *மர்யமை யும் அவருடைய மகனையும் தவிர* என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்” புகாரி(3431)

இம்ரானின் மனைவி & மர்யம் (அலை) அவர்களின் தாயார்

*நான் இவளுக்கு மர்யம் என்று பெயரிட்டேன். விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இவருக்கும், இவரது வழித்தோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன்* எனவும் அவர் கூறினார். (3:36)

_________________________

D) *ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் குடும்பத்தினரையும், இம்ரானின் குடும்பத்தினரையும் அகிலத்தாரைவிட அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்*. (3:33)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *