கேள்வி :

லூத் சமுதாய மக்களுக்கு எந்த நேரத்தில் தண்டனையை அனுப்பினான்?

பதில் :

பொழுது உதிக்கும் நேரத்தில்

ஆதாரம் :

அதிகாலைப் பொழுதில் அவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது.

அல்குர்ஆன் : 15 – 73

கேள்வி :

லூத் நபியின் சமுதாயத்திற்கு அல்லாஹ் வழங்கிய வேதனை என்ன?

பதில் :

82. நமது கட்டளை வந்தபோது, சுடப்பட்ட கற்களால் அவ்வூரின் மீது கல்மழை பொழிந்து, அதன் மேற்பகுதியைக் கீழ்ப்பகுதியாக்கினோம்.

83. (அவை) உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டது. அவ்வூர் அநீதி இழைத்த இவர்களுக்குத் தொலைவில் இல்லை.

அல்குர்ஆன் : 11 – 82,83

கேள்வி :

லூத் சமுதாயத்தை எவ்வாறு அழிக்கப்பட்டார்கள்?

பதில் :

84. அவர்களுக்கு பெருமழையைப் பொழிவித்தோம். “குற்றவாளிகளின் முடிவு எவ்வாறு இருந்தது?” என்பதைக் கவனிப்பீராக!

அல்குர்ஆன் : 7 : 84

கேள்வி :

ஸாலிஹ் நபியின் சமுதாயத்தை அல்லாஹ் எந்த நேரத்தில் அழித்தான்?

பதில் :

அதிகாலை நேரத்தில்

ஆதாரம் :

அவர்கள் வெளிச்சத்தை அடைந்தபோது, பெரும் சப்தம் அவர்களைத் தாக்கியது.

அல்குர்ஆன் : 15 – 73

கேள்வி :

ஸாலிஹ் நபியின் சமுதாய மக்களுக்கு அல்லாஹ் கொடுத்த தண்டனை என்ன?

பதில் :

67. அநீதி இழைத்தவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.

அல்குர்ஆன் : 11 – 67

கேள்வி :

ஸமூது சமுதாயம் எப்படி அழிந்தார்கள்? அதற்கான காரணம் என்ன?

பதில் :

பின்னர் அந்த ஒட்டகத்தை அறுத்தனர். அவர்களின் இறைவனது கட்டளையை மீறினர். “ஸாலிஹே நீர் தூதராக இருந்தால் எங்களுக்கு எச்சரித்ததை எங்களிடம் கொண்டு வாரும்” எனவும் கூறினர். உடனே அவர்களைப் பூகம்பம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.

அல்குர்ஆன் : 7 : 77,78

கேள்வி :

ஆத் சமுதாயத்தை எவ்வாறு அழித்தான்?

பதில் :

41. உண்மையாகவே அவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. உடனே அவர்களைக் கூளங்களாக ஆக்கினோம். அநீதி இழைத்த கூட்டத்தினருக்கு (இறையருள்) தூரமே!

அல்குர்ஆன் : 23 – 41

கேள்வி :

நூஹ் நபியின் சமுதாய மக்கள் எவ்வாறு அழிந்தார்கள்?

பதில் :

ஆயினும் அவரைப் பொய்யரெனக் கருதினர். எனவே அவரையும், அவருடன் கப்பலில் இருந்தவர்களையும் காப்பாற்றினோம். நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரை மூழ்கடித்தோம். அவர்கள் குருட்டுக் கூட்டமாகவே இருந்தனர்.

அல்குர்ஆன் : 7 – 64

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed