*”குர்பானி பிராணியை அறுப்பவர்கள் கவனத்திற்கு“*
——————————————————-
1. *பெருநாள் தொழுகைக்கு பிறகு தான் பிராணியை அறுக்க வேண்டும்*.
நூல்: *முஸ்லிம் (3959)*
2. *அறுக்கும் கத்தியை கூர்மையாக வைக்க வேண்டும்.*
நூல்: *முஸ்லிம் (3977)*
3. *பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்* என்று கூறி அறுக்க வேண்டும்.
நூல்: *புகாரி (5558)*
4. நபி (ஸல்) அவர்கள் *ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள்.*
நூல் : *இப்னுகுஸைமா (1426).*
(இதற்கு நீண்ட நெடிய நேரம் ஆகுமென்றால் உணவு சாப்பிட்டுக் கொள்வது குற்றமில்லை. இது ஒரு பேணுதலாகும்)
5. *பிராணியின் மாமிசத்தை நாமும் உண்டு, உறவுகள் அண்டை வீட்டாருக்கு வழங்க வேண்டும். ஏழைகளுக்கு தர்மம் செய்ய வேண்டும். தோல், கயிறு போன்றவை தர்மத்திற்கு உரியவை.*
நூல்: *புகாரி (1717) அல்குர்ஆன் (22:36)*
6. *பிராணியை அறுப்பவர்களுக்கு கூலி மட்டும் கொடுக்க வேண்டும். மாமிசம், தோல், கயிறு என எதனையும் அவர்களுக்கு கொடுக்க கூடாது. *
நூல்: *புகாரி (1717)*
7. *பிராணியை அறுத்த பிறகு நமது உடலில் வெட்டாமல் இருந்த நகம், முடிகளை வெட்டிக் கொள்ளலாம்.*
நூல்: *முஸ்லிம் (3998)*
குறிப்பு: பிராணியை அறுக்கும் காட்சிகளை வீடியோ – புகைப்படம் எடுத்தலை தவிர்க்கவும். முகநூல் வாட்சபில் பரப்புதல் போன்ற வீணான காரியங்களை தவிர்க்கவும்.
இவைகளை கவனத்தில் கொண்டு செயல்படுவோம். இதனை பிறருக்கும் பகிர்ந்து நன்மை பெறுவோம்