இணைவைத்தல்(ஷிர்க்– شرك– The Sin of Idolatry or Polytheism) என்றால் என்ன?
———————————————
அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே ஒரு இறைவனை அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை. எதுவும் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவை இணை வைத்தல் ஆகும்.
- பல கடவுள்கள் இருப்பதாக நம்புவது
2 . ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுடைய பண்புகள், ஆற்றல்கள் அவனுக்கு இருப்பது போல் மற்றவர்களுக்கு இருப்பதாக நம்புவது
3 . அல்லாஹ்வுக்குச் செய்யும் வழிபாடுகளில் எந்த ஒன்றையும் மற்றவர்களுக்குச் செய்வது
இணை வைத்தல் மாபெரும் அநியாயம்
லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது ”என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்” என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 31:13)
மன்னிக்கப்படாத குற்றம்
———————————-
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்
(அல்குர்ஆன் 4:48)
நிரந்தர நரகம்
———————-
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (அல்குர்ஆன் 5:72)
இணைவைத்தலால் நல்லறங்கள் அழிந்துவிடும்
———————————————
”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; (அல்குர்ஆன் 39:65)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யும் கடமை, அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை வணங்குவதாகும். அல்லாஹ் அடியார்களுக்குச் செய்யும் கடமை தனக்கு எதையும் இணை கற்பிக்காதவரை வேதனை செய்யாமல் இருப்பதாகும்.
அறிவிப்பவர் : முஆத்(ரலி)
நூல்: புகாரீ (2856)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனை சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம் புகுவார்.
நூல் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல் : புகாரீ (1238)
ஏகத்துவம்