“அந்நியப் பெண்ணுடன் தனிமையில் இருப்பதும் அவளிடம் செல்வதும் தடை செய்யப்பட்டதாகும்.
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கவனத்தில் வையுங்கள்! கன்னி கழிந்த எந்தப் பெண்ணுடனும் எந்த ஆணும் இரவில் (தனியாகத்) தங்க வேண்டாம்; அவர் அவளை மணந்துகொண்டவராகவோ (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினராகவோ இருந்தால் தவிர!
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)
ஹதீஸ் என் : 4382
நூல் : முஸ்லிம்
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர் (அவள் இருக்குமிடத்திற்குச் செல்வது) குறித்துத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர் (“அல்ஹம்வு’) மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் (ரலி)
ஹதீஸ் என் : 4383
நூல் : முஸ்லிம்