நபிகள் நாயகம் (சல்) அவர்களுடைய இறுதிப் பேருரையின் முக்கிய துளிகள் ..

தூதுச் செய்தி இத்துடன் நிறைவு பெற்று விட்டது (ஆதாரம் முஸ்லிம் 2137)

அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக கருதாதீர்கள்,
கொலை செய்யாதீர்கள், திருடாதீர்கள், விபச்சாரம் செய்யாதீர்கள் (ஆதாரம் அஹமத் 18219)

உங்களிடம் இரண்டை விட்டு செல்கிறேன் (குர் ஆன் மற்றும் நபிமொழி), இதை பின்பற்றி நடக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவற மாட்டீர்கள் (ஆதாரம் முஸ்லிம் 2137)

சிறு சிறு அமல்களில் அலட்சியம் காட்டாதீர்கள், ஷைத்தான் அதில் தான் உங்களை வழிகெடுக்கிறான் (ஆதாரம் ஹாகிம் 318)

மக்கா எப்படி புனிதமான நகரமோ, ஹஜ்ஜினுடைய நாட்கள் எப்படி புனிதமான நாட்களோ, அதே போன்று, ஒவ்வொரு மனித உயிரும் உங்களுக்குப் புனிதமானவை (ஆதாரம் புஹாரி 1742)

எனக்குப் பிறகு ஒருவருக்கொருவர் வெட்டிக் கொண்டு சாகின்ற வழிகேடான நிலையை அடைந்து விடாதீர்கள் (ஆதாரம் புஹாரி 4406)

ஹஜ்ஜையும் உம்ராவையும் எப்படி செய்வது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் இதுவே எனது கடைசி ஹஜ் (ஆதாரம் முஸ்லிம் 2286)

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு உற்ற சகோதரனாவான் (ஆதாரம் ஹாகிம் 318)

நீங்கள் அனைவரும் ஒரு தாய் தந்தையர் வழி வந்தவர்கள், அரேபியர் அரேபியர் அல்லாதவரை விட சிறந்தவரில்லை, கருப்பரை விட சிகப்பானவரோ, சிகப்பானவரை விட கருப்பானவரோ உயர்ந்தவரில்லை.
இறையச்சம் தான் உயர்வைத் தீர்மானிக்கும் (ஆதாரம் அஹமத் 22391)

அண்டை வீட்டாருக்கு நமது சொத்தில் ஒரு பங்கினை கொடுத்து விட சொல்லி விடுவார்களோ என்று அஞ்சுகிற அளவிற்கு அண்டை வீட்டார் விஷயத்தில் நாம் பேண வேண்டிய நெறிகளை போதனை செய்தார்கள் (ஆதாரம் தப்ரானீ 7523)

எவரது நாவு மற்றும் கைகளின் தீங்குகளிலிருந்து இன்னொருவர் பாதுகாப்பு பெறுகிறாரோ, அவரே நல்ல முஸ்லிம் (ஆதாரம் தப்ரானி 3444)

அறியாமை காலத்தில் இந்த மக்களிடம் நிலவி வந்த அனைத்து விதமான கெட்ட மற்றும் மூடப் பழக்கவழக்கங்களை இன்றோடு என் காலூக்கடியில் போட்டு புதைத்து விட்டேன்
(ஆதாரம் முஸ்லிம் 2137)

வட்டி தடை செய்யப்பட்டிருக்கிறது. (ஆதாரம் முஸ்லிம் 2137)

வாங்கிய கடன் கட்டாயம் திருப்பி செலுத்தப்பட வேண்டும் (ஆதாரம் இப்னு மாஜா 2396)

ஒருவருடைய பாவத்தை இன்னொருவர் சுமக்க மாட்டார் (ஆதாரம் திர்மிதீ 2085)

விபச்சாரத்தில் ஈடுபட்டவர் மறுமையில் நஷ்டவாளி (ஆதாரம் திர்மிதி 2046)

இஸ்லாமிய அரசுக்கு முழுமையாக கட்டுப்படுங்கள் (ஆதாரம் முஸ்லிம் 3422)

உங்கள் மனைவியர் அல்லாஹ்வால் உங்களுக்கு வழங்கப்பட்ட அமானிதம், அவர்களை நல்ல முறையில் கவனியுங்கள் (ஆதாரம் முஸ்லிம் 2137)

இங்கு வந்தவர் வராதவர்களிடம் இதை எடுத்து சொல்லுங்கள் (அதாவது, நபியின் காலத்திற்குப் பிறகு தாவா என்பது அனைவரின் மீதும் கடமை).
இங்கு வந்தவர்களை விட, நீங்கள் யாரிடம் எடுத்து சொல்கிறீர்களோ அவர்கள் உங்களை விட நன்கு விளங்கக் கூடும் (ஆதாரம் புஹாரி 67)

கியாமத் நாளின் அடையாளமாக வரக்கூடிய தஜ்ஜாலை குறித்து நான் எச்சரிக்கிறேன் (ஆதாரம் புஹாரி 4402)

முக்கிய துளிகள் ..

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed