விவாகரத்து

 

ஒத்துவராதவர்கள் பொருளாதாரக் காரணத்திற்காக சேர்ந்திருக்கத் தேவையில்லை – 4:130

 

விவாகரத்துக்கு அவசரப்படக் கூடாது – 4:34,35

 

தம்பதியரிடையே மற்றவர்கள் தலையிட்டு சமரசம் செய்தல் அவசியம் – 4:35

 

துன்புறுத்துவதற்காக விவாகரத்துச் செய்யாமல் வைத்துக் கொள்ளக் கூடாது – 2:231

 

முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மூன்று மாதவிடாய்க் காலம் முடிவதற்குள் மனைவியுடன் எவ்விதச் சடங்குமின்றி சேர்ந்து கொள்ளலாம் – 2:228, 2:231

 

இரண்டு தடவை விவாகரத்துச் செய்தால் திரும்ப சேர்ந்து கொள்ளலாம் – 2:229

 

மூன்றாவது விவாகரத்துக்குப் பின் சேர முடியாது – 2:230

 

மூன்றாவது விவாகரத்துக்குப் பின் அவள் வேறு திருமணம் செய்து விவாகரத்தும் நடந்தால் திருமணம் செய்யலாம் – 2:230

 

மூன்று மாதவிடாய் முடிந்து விட்டால் திருமணம் உறவு நீங்கி விடும் – 2:231

 

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் கழித்தே மறுமணம் செய்யலாம் – 2:228

 

முதல் தடவை விவாகரத்துக்குப் பின் வீட்டை விட்டு மனைவியை வெளியேற்றக் கூடாது – 65:1

 

பெண்கள், தாம் கருவுற்றிருப்பதை மறைக்கக் கூடாது – 2:228

 

மூன்று மாதவிடாய்க்கு முன் மறுமணம் பற்றி பேசக் கூடாது – 2:235

 

மஹர் பேசாமல் மணமுடித்து உடலுறவு கொள்ளாமல் விவாகரத்துச் செய்தால் கணவன் தனது வசதிக்கேற்ப ஒரு தொகை அளிப்பது கடமை – 2:236

 

மாதவிடாய் நின்றவர்கள் விவாகரத்துச் செய்யப்பட்டாலும், கணவனை இழந்தாலும் மூன்று மாதங்கள் கழித்தே மறுமணம் செய்யலாம் – 65:4

 

திருமணம் செய்து உடலுறவுக்கு முன்பே விவாகரத்துச் செய்தால் உடனேயே அப்பெண் மறுமணம் செய்யலாம் – 33:49

 

விவாகரத்துச் செய்யப்பட்டவள் தனது குழந்தைக்குப் பாலூட்ட கூலி கேட்கலாம் – 2:233

 

விவாகரத்துச் செய்யப்பட்டவர்களுக்கு தத்தமது வசதிக்கேற்ப பொருளாதாரம் அளிப்பது கடமை – 2:241

 

பெண்களைத் துன்புறுத்துவதற்காக மிரட்டக் கூடாது – 2:231, 65:6

 

இத்தா முடிந்து விட்டால் விரும்பியவரை மணக்க பெண்களுக்கு உரிமை உண்டு – 2:232

 

பெண்களின் மறுமணத்துக்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது – 2:232

 

விவாகரத்துக்குப் பின்பு பாலூட்டும் பொறுப்பு கணவனைச் சேர்ந்தது – 2:233

 

விவாகரத்துச் செய்யப்பட்ட மனைவியே பாலூட்டினால் அதற்கு உரியதைக் கொடுக்க வேண்டும் – 2:233, 65:6

 

தந்தை இறந்து விட்டால் அவனது வாரிசுகள் அந்தச் செலவுக்குப் பொறுப்பு – 2:233

 

எந்தக் காரியமும் சக்திக்கு உட்பட்டே – 2:233, 2:236, 2:286, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7

 

செவிலித்தாய் மூலம் பாலூட்டுதல் – 2:233

 

குழந்தைக்குப் பாலூட்டும் காலம் இரண்டு ஆண்டுகள் – 2:233, 31:14, 46:15

 

பாலூட்டும் காலத்தில் உணவும் உடையும் வழங்குதல் – 2:233

 

கோபத்துடன் நான்கு மாதங்களுக்கு அதிகமாகப் பிரிந்திருக்கக் கூடாது – 2:226

 

விவாகரத்துக்குப் பின் இத்தா மூன்று மாதவிடாய் – 2:228

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *