கேள்வி : *மறுமை நாள் எவ்வளவு நேரத்தில் வரும்?*

பதில் : *கண்மூடித் திறப்பதுபோல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும்*. (அல்குர்ஆன் 16:77)

கேள்வி : *வேதனை காணும்போது தண்டனை இலேசக்கப்படுமா?*

பதில் : *வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள்* (அல்குர்ஆன் 16:85)

கேள்வி : *மக்கா வாசிகளுக்கு கடிதம் கொடுத்த நபித்தோழர் யார்?*

பதில் : *ஹாத்திப் பின் அபீ பல்தஆ* (ரலி). (ஆதாரம் : புகாரி 3007)

கேள்வி : *ஹாத்திப் பின் அபீபல்தஆ (ரலி) அவர்களுக்கு தண்டனை ஏன் நபிகளார் வழங்கவில்லை?*

பதில் : *பத்ர் போரில் அவர்கள் கலந்து கொண்டதால்* கிடைத்த நன்மையின் காரணமாக (ஆதாரம் : புகாரி 3008)

கேள்வி : *இறைவன் வீடுகளை ஏற்படுத்தியது எதற்கு?*

பதில் : *நிம்மதியடைவதற்கு*. (அல்குர்ஆன் 16:80)

கேள்வி : *உளவு சொன்ன ஹாத்திப் பின் அபீ பல்தஆ (ரலி) அவர்களை என்ன செய்வதாக* உமர் (ரலி) கூறினார்கள்?

பதில் : அவரின் *கழுத்தை வெட்டிவிடுவதாக* கூறினார்கள் (ஆதாரம் : புகாரி 3007)

கேள்வி : *இறைச் சட்டங்களில் நபியின் கடமை என்ன?*

பதில் : *தெளிவாக எடுத்துச் சொல்வதே*! (அல்குர்ஆன் 16:82)

______________

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed