கேள்வி : *அல்லாஹ்வுக்கு உதாரணங்கள் கூறலாமா?*

பதில் : *கூடாது* (அல்குர்ஆன் 16:74)

கேள்வி : *பயணம் என்பதை நபிகளார் எப்படி குறிப்பிட்டார்கள்?*

பதில் : *வேதனையின் ஒரு பங்கு* (ஆதாரம் : புகாரி 3001)

கேள்வி : *பயணத்தின் வேலை முடிந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?*

பதில் : *உடன் தம் வீட்டாரிடம் திரும்ப வேண்டும்* (ஆதாரம் : புகாரி 3001)

கேள்வி : *மனிதன் செய்யும் தீயசெயல்களுக்கு உடனுக்குடன் தண்டிக்கப்பட்டால் நிலை என்ன?*

பதில் : *பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான்* (அல்குர்ஆன் 16:61)

கேள்வி : *பால் எங்கு உற்பத்தியாகிறது*?

பதில் : *கால்நடைகளின் வயிறுகளில் உள்ள செறிக்கப்பட்ட உணவுக்கும், இரத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் உற்பத்தியாகிறது*. (அல்குர்ஆன் 16:66)

கேள்வி : *தேன் எங்கு உற்பத்தியாகிறது*?

பதில் : *தேனியின் வயிற்றிரிருந்து* (அல்குர்ஆன் 16:69)

கேள்வி : *தர்மம் செய்த பொருளை திரும்ப விலைக்கு வாங்கலாமா?*

பதில் : *கூடாது* (ஆதாரம் : புகாரி 3002)

கேள்வி : *நபிகளாரின் விவரங்களை மக்காவிற்கு எடுத்து சென்ற பெண்ணை பிடித்து வருமாறு யாரை* நபிகளார் அனுப்பினார்கள்?

பதில் : *அலீ (ரலி), மிக்தாத்* (ரலி) (ஆதாரம் : புகாரி 3007)

கேள்வி : *மக்காவில் கடிதம் கொண்டு சென்ற பெண்மணி எந்த இடத்தில் இருப்பதாக நபிகளார் கூறினார்கள்?*

பதில் : *ரவ்ளத்துக்காக்* (ஆதாரம் : புகாரி 3007)

___________

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed