➖➖➖➖➖
மரணம்
➖➖➖➖➖

34:30. உங்களுக்கென வாக்களிக்கப்பட்ட நாள் ஒன்று உள்ளது. அதை விட்டு சிறிது நேரம் பிந்தவும் மாட்டீர்கள். முந்தவும் மாட்டீர்கள் என்று கூறுவீராக!

62:8. நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்திக்கவுள்ளது.

63:10. உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்!

63:11. எந்த உயிருக்கும் அதற்குரிய தவணை வந்து விட்டால் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

3:185. ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கும்.

4:78. நீங்கள் எங்கே இருந்தபோதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் கையைப் பிடித்துக் கொண்டு இந்த உலகத்தில் நீ ஒரு பயனியைப் போன்று வாழ். அல்லது வழிப்போக்கனைப் போல் வாழ். மண்ணறைக்குள் சென்று விட்டவர்களில் ஒருவனாக உன்னை நீ கருதிக்கொள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி­)
நூல் : முஃஜம் இப்னில் அஃராபி 3467

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை நினைவூட்டுகிறது.

அறிவிப்பவர் : புரைதா (ரலி­)
நூல் : திர்மிதி 974

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் உரையாற்றும் போது, அடக்கவிடத்தில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் கூறினார்கள். அவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் போது முஸ்லி­ம்கள் (அச்சத்தால்) கதறி விட்டார்கள்.

அறிவிப்பவர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி­)
நூல் : புகாரி 1373

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (தவறான) ஆசைகளைத் தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ர­லி)
நூல் : திர்மிதி 2229

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *