அமல்களின் சிறப்புகள் என்ற புத்தகத்திலிருந்து….

அமல்களின் சிறப்புகள்என்றதொகுப்பில் உள்ள மனித இயல்புக்கு மாற்றமான, ஆதாரங்கள் இல்லாத, நம்பமுடியாத சில கதைகளின் சுருக்கங்களைத் தங்கள் சிந்தனைக்காக இங்குத் தருகிறோம்

கடன்பட்டிருந்த ஒருவருக்கு, நபி (ஸல்) கப்ரிலிருந்து கைநீட்டிப் பணம் கொடுத்தது

(பக்கம் 943).

கையில் காசில்லாமல் ஹஜ்ஜுக்குப் போனவருக்கு நபி (ஸல்) கப்ரிலிருந்து கைநீட்டிப் பணமுடிப்பு வழங்கியது

(பக்கம் 925).

கப்ரிலிருந்து கொண்டே நபி (ஸல்) ஒருவருக்குப் போர்வையைப் பரிசளித்தது

(பக்கம் 944).

பசியாளிக்கு நபி (ஸல்) கிச்சடியும் குழம்பும் கொடுத்தது

(பக்கம் 945).

கப்ரிலிருந்து கொண்டே நபி (ஸல்) ஒருவருக்கு ரொட்டி கொடுத்தது

(பக்கம் 797).

ஷாஹ் வலியுல்லாஹ்வுக்கு நெய்ச்சோறு ஒரு மரவை கொடுத்தது

(பக்கம் 799).

அல்லாஹ்வின் மீது காதல் கொண்டால் மரணம் கிடையாது

(பக்கம் 657).

தொழும்போது ஆப்பரேஷன் – 2 (பக்கம் 144).

பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவு முழுக்க நின்று தொழுது, அதிலேயே இறந்துபோகப் பந்தயம்

(பக்கம் 43,44).

இறந்த பிறகு கபுரில் தொழுத மய்யித் ஸாபித் அல் பன்னானி

(பக்கம் 129, தொழுகையின் சிறப்பு-14).

நாற்பது ஆண்டுகள் தூங்காத பெரியார்

(பக்கம் 118, தொழுகையின் சிறப்பு-1).

அறுபது ஆண்டுகளாக அழுது கொண்டே இருந்த பெரியார்

(தொழுகையின் சிறப்பு-2).

பதினைந்து ஆண்டுகள் படுக்காத பெரியார்

(தொழுகையின் சிறப்பு-11).

எழுபது ஆண்டுகள் இடைவிடாது தொழுத பெரியார்

(தொழுகையின் சிறப்பு-15).

அறுபது ஆண்டுகள் இஷாவுக்கு செய்த ஒளுவோடு ஃபஜ்ருத் தொழுத பெரியார்

(தொழுகையின் சிறப்பு-17).

நாற்பது ஆண்டுகள் இரவில் அழுது, பகலில் நோன்பு வைத்த பெரியார்

(தொழுகையின் சிறப்பு-13).

அரசராகப் பொறுப்பேற்றதால் மனைவியுடன் உறவு கொள்ள மறுத்த அரசர்

(தொழுகையின் சிறப்பு-12).

பதினைந்து நாட்களுக்கு ஒருதடவை மட்டுமே சாப்பிட்ட பெரியார்

(தொழுகையின் சிறப்பு-7).

நாற்பது ஆண்டுகள் இரவு முழுவதும் தொழுது, பகல் முழுதும் நோன்பிருந்தவர்

(பக்கம் 132)

தினமும் முன்னூறு ரக்கத்துக்கள் நஃபில் தொழுத இமாம்

(பக்கம் 132)

130 வயதுவரை தினமும் இருநூறு ரக்கத்துக்கள் நஃபில் தொழுத பெரியார்

(பக்கம் 86)

ரமழான் மாதத் தொழுகையில் அறுபது தடவை குர்ஆன் ஒதி முடித்த இமாம்

(பக்கம் 132)

ஐம்பது ஆண்டுகள் இஷாவையும் சுபுஹையும் ஒரே உளுவைக் கொண்டு தொழுத பெரியார் (பக்கம் 132)முப்பது/நாற்பது/ஐம்பது

ஆண்டுகள் இஷாவுடைய உளுவைக் கொண்டு சுபுஹைத் தொழுத இமாம்

(பக்கம் 132)

ஒவ்வொரு நாளும் இருநூறு ரக்அத்கள் நஃபில் தொழுத இமாம்

(பக்கம் 130).

ஒவ்வொரு நாளும் ஆயிரம் ரக்அத்கள் நஃபில் தொழுத பெரியார்

(பக்கம் 160).

ஓர் இரவுக்கு ஒரு ருகூ; ஒர் இரவுக்கு ஒரு ஸஜ்தா செய்த பெரியார்

(பக்கம் 161).

நோன்பு துறக்கும்போது வயிறு நிறைய உண்ணக் கூடாது

(பக்கம் 62).

ஸஹரிலும் வயிறு நிறைய உண்ணக் கூடாது

(பக்கம் 64).

கடும் குளிரின்போது உடைகளைக் கழற்றி வைத்துக் கொள்ள வேண்டும் (பக்கம் 64).ஸஹருக்கும்இஃப்தாருக்கும் சேர்த்து ஒன்றரை ரொட்டி போதும் (பக்கம் 65).ஸஹருக்கும் இஃப்தாருக்கும் பால் கலவாததேநீர் மட்டும் போதும் (பக்கம் 65).சந்திக்காமலேயே சப்பாணியை நடக்க வைத்தவர் (பக்கம்124).தொழுகையில்லாமல் சொர்க்கத்தில் எப்படி காலம் தள்ளுவது? பெரியாரின் கவலை (பக்கம் 45)

இதுபோன்ற கதைகள்அமல்களின் சிறப்புகளில் நிறைந்திருக்கின்றன. சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறோம்.

மேற்காணும் கதைகளை எழுதிய ஸக்கரிய்யா ஸாஹிப் கூறுகிறார்:

பெரியார்களுடைய இந்தப் பழக்க வழக்கங்களெல்லாம் மேலெழுந்த வாரியாகப் பார்த்துப் படிப்பதற்குமட்டுமோ அல்லது அவர்களுக்குப் புகழ் வார்த்தைகள் கூறப்பட வேண்டுமென்பதற்காகவோஎழுதப்படுவதில்லை, எனினும் தன் முயற்சிக்குத் தக்கவாறு அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவேஎழுதப்படுகின்றன. இயன்ற அளவு பூர்த்தியாக்குவதில் முயற்சி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்

மனித இயல்புக்கு அப்பாற்பட்ட கதைகளைப் பின்பற்றி வாழ்வது சாத்தியமா?

கூடுமா? என்ற கேள்விகள் நம் முன் எழுகின்றன. மேற்காண்பவை அனைத்தும் இஸ்லாத்தின்அடிப்படைகளுக்கு எதிரானவை என்பது தெளிவான சிந்தனையோடு அவற்றைப் படித்துப் பார்த்தால் விளங்கிவிடும். ஆதமின் மக்கள் அனைவரும் தவறு செய்யக் கூடியவர்களே. தவறைச் சுட்டிக் காட்டும்போது திருத்திக்கொள்வதே ஒரு முஸ்லிமுக்கு அழகு. ஆனால், மார்க்கம் போதிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் தப்லீக்கிலும்நிலைமை தலைகீழ்தான்.

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed