மனப்பெண்ணிற்கு கருகமணி மெட்டி அணிவிக்க வேண்டுமா?

    மனப்பெண் கருகமணியை கட்ட வேண்டும் என்ற வழிமுறையை நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தரவில்லை. இவ்வாறு செய்யுமாறு திருக்குர்ஆனும் கூறவில்லை.

திருமணம் செய்வதாக இருந்தால் மனமகன் மனப்பெண்ணிற்கு மஹர் என்ற திருமணக்கொடையை கட்டாயம் தர வேண்டும். இரண்டு சாட்சிகள் அவசியம். பெண்ணின் பொருப்பாளரின் சம்மதம் அவசியம் வேண்டும். பெண்ணுடைய சம்மதமும் முக்கியம். இவைகள் தான் திருமணத்தின் நிபந்தனைகள். 

    திருமணம் என்பது ஆண்கள் பெண்களிடத்தில் எடுக்கும் ஒரு வலிமையான ஒப்பந்தமாகும். 

உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை (பெண்களாகிய) அவர்கள் எடுத்துள்ளார்கள்

அல்குர்ஆன் (4 : 21)

    கருகமணியை அழகிற்காக பெண்கள் அணிவதில்லை. அது கழுத்தில் இருந்தால் தான் கணவன் உயிருடன் இருப்பான். அது அறுந்துவிட்டால் கணவனுக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிடும் என்ற மூடநம்பிக்கையில் அணியப்படுகிறது.

எனவே தான் கருகமணி அறுந்துவிட்டால் கருகமணி அறுந்துவிட்டது என்று சொல்லாமல் கருகமணி பெருகிவிட்டது என்று கூறுவார்கள்.

    இந்த மூடநம்பிக்கை தாலி என்ற பெயரில் மாற்றுமதத்தவர்களிடத்தில் தான் உள்ளது. மாற்றுமத்தவர்களைப் போன்று நடந்துகொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள். 

    (மற்றக்) கூட்டத்தார்களைப் போன்று யார் நடக்கிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவர் தான். (நம்மைச் சார்ந்தவர் இல்லை. )

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : அபூதாவுத் (3512)

    கருகமணியைப் போன்றே மெட்டியும் மூடநம்பிக்கையின் காரணமாக அணியப்படுகிறது.

இவற்றை அழகு என்ற காரணத்திற்காக பெண்கள் அணிந்தால் தவறாகாது. ஆனால் சடங்கு சம்பரதாயம் என்ற காரணத்திற்காக மக்களுக்கு மத்தியில் இவை அணியப்பட்டுவருவதால் இந்தப் பொருட்களை நாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *