மஹர் வாங்குதல்

குடும்ப வாழ்க்கையில் பெண்ணாகிறவள் கணவனுக்கு பணிவிடை செய்வது அவனது விருப்பத்தை நிறைவேற்றுவது குழந்தையை பெற்றெடுப்பது போன்ற பல பணிகளை செய்கிறாள். இதனால் பெண்ணே அதிக துன்பத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது. இதை கவனத்தில் வைத்து இஸ்லாம் ஆண்கள் பெண்களுக்கு அவர்கள் கேட்கின்ற மஹர் என்ற மணக்கொடையை தர வேண்டும் என்று கூறுகிறது. 

திருமணத்தின் போதே ஒரு பெரும் தொகையை மனைவி வாங்கிக்கொண்டால் பிற்காலத்தில் கணவனால் அவள் விடப்படும் போது அதை வைத்து தன் தேவையை நிறைவேற்றிக்கொள்ள இயலும். இதை பெரும்பாலான பெண்கள் உணராத காரணத்தினால் மஹர் தொகையை கணவனிடமிருந்து வாங்குவதில்லை.

அப்படி வாங்கினாலும் கணவன் கொடுப்பது குறைவாக இருந்தாலும் பராவயில்லை என்று வாங்கிக்கொள்கிறார்கள். 

சமுதாயத்தில் நிலவும் வரதட்சனை கொடுமையின் காரணத்தினால் தான் பெண்கள் மஹர் விஷயத்தில் அலட்சியம் காட்டுகிறார்கள். பெண்களிடம் வரதட்சனைக் கேட்டு கசக்கிப்புலியும் கேடுகெட்ட மாப்பிள்ளைகள் அல்லாஹ்விற்கு பயந்து நடந்துகொள்ள வேண்டும். 

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!

 அல்குர்ஆன் (4 : 4)

அப்பெண்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக்கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக் கொருவர் திருப்தியடைந்தால் உங்களுக்குக் குற்றம் இல்லை.

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தம்மை (அர்ப்பணித்து) அன்பளிப்புச் செய்துவிட்டதாகக் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இனி) எனக்கு எந்தப் பெண்ணும் தேவையில்லை” என்று சொன்னார்கள்.

அப்போது அங்கிருந்த ஒரு மனிதர் “இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள்!” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள்,

ஏதேனும் ஆடையொன்றை அவளுக்கு (“மஹ்ர்எனும் விவாகக் கொடையாக)க் கொடு!” என்று (அந்த மனிதரிடம்) சொன்னார்கள். அவர், “என்னிடம் இல்லை” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள்,

அவளுக்கு (எதையேனும் மஹ்ராகக்) கொடு! அது இரும்பாலான மோதிரமாக இருந்தாலும் சரியே” என்று சொன்னார்கள். இதைக் கேட்டு அந்த மனிதர் கலங்கினார்.

எனவே, நபி (ஸல்) அவர்கள், “குர்ஆனிலிருந்து உன்னிடம் என்ன (அத்தியாயம் மனனமாக) இருக்கிறது?” என்று கேட்டார்கள். அவர் இன்ன இன்ன அத்தியா யங்கள் (எனக்கு மனப்பாடமாக) உள்ளன” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள்,  “உம்முடன் இருக்கும் குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்து வைத்தேன்” என்று சொன்னார்கள். 

அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ரலி)

நூல் : புகாரி (5029)

மனைவியின் பொருள் மனைவிக்கே உரியதாகும்

மனைவியிடத்தில் இருக்கும் செல்வம் கணவனுக்கு உரியது என்று அதிகமான மக்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் மனைவியின் ஆபரணங்களை கணவன் கேட்கும் போது இவ்வாறு கேட்பதற்கு அவனுக்கு உரிமை உள்ளது என்று நினைத்துக் கொண்டு விருப்பமில்லாமலேயே அவனிடத்தில் கொடுத்து விடுகிறார்கள். 

இது தவறான நம்பிக்கை.

தனக்குக் கிடைக்கின்ற பொருளை தன் வசத்தில் வைத்துக் கொள்வதற்கு பெண்ணுக்கு இஸ்லாத்தில் முழு உரிமை வழங்கப்பட்டுள்ளது. தன் கணவனுக்கு தன் பொருளிலிருந்து எதையாவது தர வேண்டும் என்று அவள் விரும்பினால்  கணவனுக்கு கொடுப்பதில் தவறில்லை.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் தங்கள் சொத்துக்களை தங்களுக்கு உரியதாகவே வைத்துக்கொண்டார்கள். 

நான் பள்ளிவாசலில் இருந்தபோது நபி(ஸல்) அவாகள், “பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்” எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலிலி) அவர்களுக்கும் மற்றும் என் அரவணைப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன்.

எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் எனது அரவணைப்பில் வளரும்  அநாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவழிப்பது ஸதகாவாகுமா என நபி(ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன்.

அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்‘  எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால்(ரலி) வந்தார்.

அவரிடம் நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபி(ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், “அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர்ஸைனப்எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள்எந்த ஸைனப்?” எனக் கேட்டதும் பிலால்(ரலிலி), “அப்துல்லாஹ்வின் மனைவி’ எனக் கூறினார்.

உடனே நபி(ஸல்) “ஆம்! ஸைனபுக்கு இரு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் அவர்களின் மனைவி ஸைனப் (ரலி)

நூல் : புகாரி (1466)

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!  

அல்குர்ஆன் (4 : 4)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed