திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part 6)

கேள்வி: *ஹுதமா என்று இறைவன் எதைக் குறிப்பிடுகிறான்?*

பதில்: *ஹுதமா-மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. அது உள்ளங்களைச் சென்றடையும்*. (குர்ஆன் 104-4,5,6,7)

கேள்வி: *ஹாவியா என்று இறைவன் எதைக் குறிப்பிடுகிறான்?*

பதில்: *ஹாவியா-அது சுட்டு எரிக்கும் நரகத்தின் தீக்கிடங்காகும்*. (குர்ஆன் 101-,10,11)

கேள்வி: *ஜக்கூம் என்று இறைவன் எதைக் குறிப்பிடுகிறான்?*

பதில்: *ஜக்கூம்-இது நரகத்தில் உள்ள கள்ளி மரமாகும்: நரகவாசிகளின் விருந்தாகும்: அம்மரம் நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும்: அதன் பாளைகள் சைத்தான்களின் தலைகளைப் போல் இருக்கும்.*
(குர்ஆன் 37:61-66 & 44:43-46, 56:52)

கேள்வி: *லுக்மான (அலை) அவர்கள் தம் புதல்வருக்கு அறிவுரை கூறுகையில் எந்த செயலை செய்தால் அது மிகப்பெரும்* அநியாயமாகும் என்று கூறினார்கள்?

பதில்: இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; ‘*என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்*,’ என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).
(குர்ஆன் 31:13)

கேள்வி: *நம்பிக்கை கொண்டவர்களை சோதிப்பதாக அல்லாஹ் கூறுபவற்றுல் சிலதைக் கூறுக*!

பதில்: *உங்களை ஓரளவு பயம் மற்றும் பசியைக் கொண்டும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றைக் குறைத்தும் நாம் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!*! (குர்ஆன் 2:155)

கேள்வி: *கேலி செய்தல் (பரிகாசம் செய்தல், கிண்டல் செய்தல்) குறித்து குர்ஆன் கூறுவது என்ன?*

பதில்: *கேலி செய்தல் (பரிகசிப்பது, கின்டல் செய்வது) அறிவீனர்களின் செயல்*. குர்ஆன் ( 2:67)

கேள்வி: *ஈஸா (அலை) அவர்களின் சீடர்களான ஹவாரிய்யூன்கள் செய்த பிரார்த்தனை என்ன*?

பதில்: *எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக*!’ (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.)
(குர்ஆன் 3:53)

கேள்வி: *பெற்றோருக்காக என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் என குர்ஆன் கூறுகிறது?*

பதில்: *அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! “சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக*!” என்று கேட்பீராக! (குர்ஆன் 17:24)

கேள்வி: *நரகத்திற்கு எத்தனை வாசல்கள் இருப்பதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்?*

பதில்: *அதற்கு ஏழு வாசல்கள் உள்ளன.* அவர்களில் பங்கிடப்பட்ட ஒரு தொகையினர் ஒவ்வொரு வாசலுக்கும் உள்ளனர்.
(குர்ஆன் 15:44)

கேள்வி: *இறைவன் மன்னிக்காத மிகப்பெரும் பாவம் எது* என அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்?

பதில்: *ஷிர்க்* (இணைவைத்தல்)
(குர்ஆன் 4:116)

கேள்வி: *அஹ்ஸாப் போரின் போது நாற்புறமும் பல்லாயிரக்கணக்கான எதிரிகளால் சுழப்பட்டிருந்த முஸ்லிம்களை எவ்வாறு காப்பாற்றியதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்?*

பதில்: *இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்! (எதிரிப்) படைகள் உங்களிடம் வந்தபோது அவர்களுக்கு எதிராக ஒரு காற்றையும், உங்களால் பார்க்க முடியாத படைகளையும் (வானவர்களை) அனுப்பினோம். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவனாக இருக்கிறான்*.
(குர்ஆன் 33:9)

கேள்வி: *ஷைத்தான்களின் சகோதரர்கள் என யாரைக் குறித்து குர்ஆன் கூறுகிறது*?

பதில்: *விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்*.(குர்ஆன் 17:27)

கேள்வி: *நபி யூனூஸ் (அலை) அவர்கள் மீன் வயிற்றினுள் இருக்கும் போது இறைவனிடம் செய்த பிரார்த்தனையைக்* கூறுக.

பதில்: *உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்* என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார்.
(குர்ஆன் 21: 87)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *