ஜின்கள் மனித  உடலில் புகுவார்களா?

எதார்த்தத்திற்கு மாற்றமாக வினோதமான செயல்பாடுகளில் சிலர் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு நடிப்பவர்கள் ஏதோ ஒரு உள்நோக்கத்திற்காக தங்கள் மீது ஜின் வந்துவிட்டதாக கூறி சுற்றி இருப்பவர்களை பயத்தில் ஆழ்த்துகிறார்கள். இதன் மூலம் தான் நாடியதை அடையளாம் என்பதற்காகவே இந்த பித்தலாட்ட வேளையை அரங்கேற்றுகிறார்கள்.

இதைப் பார்ப்பவர்களும் ஏமாந்து போய் உண்மையில் ஜின் உடலில் புகுந்துவிட்டதாக நம்பிவிடுகிறார்கள். மனிதர்கள் ஒவ்வொருவரிடத்திலும் ஒரு ஜின் அதாவது ஷைத்தான் இருக்கிறான்.

நபி (ஸல்) அவர்கள் உட்பட ஜின் இல்லாத மனிதர் உலகில் ஒருவருமில்லை. விஷயம் இவ்வாறிருக்க குறிப்பிட்ட சிலரிடம் ஜின் இருப்பதாகவும் மற்றவர்களிடம் ஜின் இல்லை என்றும் நம்புவது இஸ்லாத்திற்கு மாற்றமான நம்பிக்கையாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஜின் இனத்தைச் சேர்ந்த கூட்டாளியொருவன் (ஷைத்தான்) தம்முடன் நியமனம் செய்யப்படாமல் உங்களில் எவரும் இல்லை” என்று கூறினார்கள். அப்போது, “தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?” என்று மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், “என்னுடனும்தான். ஆயினும் அல்லாஹ், அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்துவிட்டான். ஆகவே, எனக்கு அவன் நல்லதையே கூறுவான்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),

நூல் : முஸ்லிம்-5421

எல்லோரிடத்திலும் இருக்கின்ற ஜின் கெட்ட செயலை ஏவுவதைத் தவிர வேறு எந்த தீங்ûயும் மனிதர்களுக்கு செய்ய முடியாது. இதை இந்த ஹதீஸின் பிற்பகுதி விளக்குகிறது. என்னிடத்தில் உள்ள ஜின் எனக்கு நல்லதை மட்டுமே ஏவுவான் என்று நபி (ஸல்) அவர்கள் தனக்கும் மட்டும் உரிய தனிச்சிறப்பாக இதை கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்களை தவிர்த்து மற்றவர்களிடத்தில் உள்ள ஜின் கெட்டதை ஏவுவான் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. தீய எண்ணங்களை ஏற்படுத்தி வழிகெடுக்க முயற்சி செய்வது மட்டுமே ஜின்களால் மனிதர்களுக்கு ஏற்படும் தீங்கு என்பதை பல குர்ஆன் வசனங்கள் விளக்குகிறது. சற்று முன்பு அவற்றை படித்தோம்.

குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் சொல்லப்பட்டுள்ள இந்த விபரத்தைத் தாண்டி ஜின் பைத்தியத்தையும் நோயையும் அபரிமிதமான ஆற்றலையும் ஏற்படுத்தி உளற வைக்குமென்று நம்புவதற்கு பொய்யைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை.

மேற்கண்ட ஹதீஸில் ஷைத்தானைத் தான் ஜின் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஷைத்தானால் எந்த தீங்கை செய்ய முடியும்? எவற்றை செய்ய இயலாது? என்று ஷைத்தானைப் பற்றி விவரிக்கும் போது விரிவாக நாம் விளக்கி இருக்கிறோம். அங்கு சொல்லப்பட்டுள்ள அனைத்து ஆதாரங்களும் ஜின் வந்து ஆடுவதாக கூறப்படும் கற்பனையை தவிடுபொடியாக்குகிறது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed