நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால் நான் அவருக்குக் கொடுக்கின்றேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன்’ என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: புகாரி 1145

(மேலும் பார்க்க: புகாரி 6321, 7394 முஸ்லிம் 1261)

இந்த ஹதீஸில் அல்லாஹ் முதல் வானத்திற்கு ஒவ்வொரு நாள் இரவிலும் இறங்குகின்றான் என்ற கருத்து இடம் பெறுகின்றது.
கடந்த கால மக்களிடம் இந்தக் கருத்து முன் வைக்கப்படும் போது அவர்களுக்கு இதில் எந்த ஐயமும் ஏற்பட அறவே வாய்ப்பில்லை.

ஆனால், பூமி 24 மணி நேரமும் சுழன்று கொண்டிருக்கின்றது என்று அறிவியல் உலகில் நிரூபிக்கப்பட்ட பின்பு இந்தக் கருத்தில் சந்தேகம் ஏற்படுகின்றது.
அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றானா?

அல்லது முதல் வானத்தில் இருக்கின்றானா?

என்பதுதான் அந்தச் சந்தேகம். இந்தச் சந்தேகம் ஏன் உருவாகின்றது? சுழல்கின்ற பூமியில் இரவின் கடைசிப் பகுதி என்பது ஒரு நாளில் ஒரு தடவை மட்டும் ஏதாவது ஒரு பகுதியில் மட்டும் ஏற்படுவது கிடையாது. 24 மணி நேரமும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இரவின் கடைசிப் பகுதி ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும்.

இரவின் கடைசிப் பகுதியில் அல்லாஹ் முதல் வானத்தில் இறங்கி விடுகின்றான் என்றால் 24 மணி நேரமும் அல்லாஹ் முதல் வானத்தில்தான் இருக்கின்றான் என்றாகி விடும். அதாவது அர்ஷில் அவன் இல்லை அர்ஷ் காலியாக உள்ளது என்ற கருத்து வந்து விடும். இங்கு குர்ஆன் கூறும் கொள்கை ரீதியான விளக்கத்திற்கு நபி (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் மோதுவதாக அமைகின்றது.

உண்மையில் ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் குர்ஆனுடன் முரண்படாது. இங்கு மோதுவது போல் தோன்றுகின்றது என்றால் நமது புரிந்து கொள்ளும் தன்மையில் கோளாறு என்யுறு சரியான விளக்கத்தை நாம் தேடியாக வேண்டும்.
சத்தியக் கொள்கையை விட்டு சறுகியவர்கள்
அல்லாஹ் இறங்கி வருகின்றான் என்றால் அல்லாஹ் நமது கோரிக்கையை மிக விரைந்து ஏற்றுக் கொள்கின்றான் என்ற விளக்கத்தைக் கொடுக்க வேண்டியவர்களாகின்றோம். இப்படி ஒரு விளக்கத்தை கொடுத்தவுடன் நம்மை சத்தியக் கொள்கையை விட்டு சறுகியவர்கள் என்பது போல் நமக்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நமக்குப் பின்னால் பேசும் இவர்களிடம் நாம் கூறுவதெல்லாம், ‘எங்களுக்குப் பின்னால் வாய் கிழியப் பேசும் நீங்கள் எங்களுக்கு முன்னால் வந்து பேசுங்கள்’ என்பதுதான்
ஆனால், அந்த சந்தர்ப்பவாதிகள் அவ்வாறு வருவதில்லை. இதிலிருந்து யார் சத்தியத்தை விட்டும் சறுகியவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம். இவர்களின் சலசலப்புக்கெல்லாம் நாம் ஒரு போதும் அஞ்சிப் போவதில்லைளூ அலட்டிக் கொள்ளப் போவதும் இல்லை.
நமக்கு சத்தியமென்று தெரிகின்ற விஷயத்தை ஊருக்கு அஞ்சி, உலகுக்கு அஞ்சி போட்டுடைக்கத் தயங்கியதில்லை. அந்த அடிப்படையில் மேற்கண்ட ஹதீஸுக்கு இப்படியொரு விளக்கத்தைக் கொடுக்கின்றோம்.

இல்லையெனில் குர்ஆன் வசனத்துடன் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் மோதுகின்றது என்ற தோற்றம், மற்றவர்களிடம் ஏற்பட்டு விடும். அதைத் தவிர்க்கததான் மேற்கண்ட விளக்கம்.
இது மாதிரி நெருடலான இடங்களில் இது போன்றதொரு விளக்கம் கொடுக்கப்படுவது புதிதான ஒன்றல்ல. இவர்களாலும் நம்மாலும் மதிக்கப்படும் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் இது போன்ற நெருடலான ஒரு விஷயத்தில் கொடுத்த ஒரு விளக்கத்தை இங்கு கோடிட்டுக் காட்டுவது மிகப் பொருத்தமாக இருக்கும்
நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கின்றான்.

(அல்குர்ஆன் 57:04)

இந்த வசனத்தின் படி அல்லாஹ் மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்திருக்கின்றான் என்ற தவறான கருத்து இங்கு பெறப்படுகின்றது. இதற்கு மறுப்பு கூற வந்த இப்னு தைமிய்யா அவர்கள், ‘நீங்கள் எங்கிருந்தாலும் அவன் உங்களுடம் இருக்கின்றான்’ என்ற வசனத்தின் படி அல்லாஹ் படைப்பினங்களுடன் இரண்டறக் கலந்திருக்கின்றான் என்று பொருள் கொண்டு விடக் கூடாது. அப்படி ஒரு கருத்தை இந்த வார்த்தை நடை தரவில்லை.

இது (இந்த அத்வைதக் கொள்கை) அல்லாஹ் படைத்த இயற்கையான அமைப்பிற்கு நேர் எதிரானது, நம் முன்னோர்கள் கொண்ட ஒருமித்த கருத்துக்கு முற்றிலும் முரணானது.
வானத்தில் மிதந்து கொண்டிருக்கும் சந்திரன் ஊரில் தங்கியிருப்பவர்களுடனும் இருக்கின்றது. பயணியுடனும் இருக்கின்றது என்று சொல்லும் போது, ஊரில் இருப்பவருடன் சந்திரன் இரண்டறக் கலந்திருக்கின்றது என்றோ அல்லது பயணத்தில் இருப்பவருடன் இரண்டறக் கலந்திருக்கின்றது என்றோ எடுத்துக் காள்ள மாட்டோம். இதில் இடம் பெற்றுள்ள ‘உடன்’ என்ற வார்த்தைக்கு சந்திரன் இரண்டறக் கலந்திருக்கின்றது என்று எடுத்துக் கொள்ள மாட்டோம்.

அது போலத்தான் மேற்கண்ட வசனத்தின் பொருளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் அர்ஷின் மேல் இருக்கின்றான். அதே சமயம் நம்முடனும் இருக்கின்றான் என்ற கருத்தை இந்தக் கண்ணோட்டத்தில் எடுத்துக் கொள்ளும் போது ஒவ்வொன்றும் அதனதன் பொருளின் அமைந்து,

மாற்றி – திரித்துக் கூறுவதற்கு அவசியமின்றப் போகின்றது.
அல்அகீதத்துல் வாஸிதிய்யா என்ற நூலில் இப்னு தைமிய்யா அவர்கள் இப்படியொரு விளக்கத்தைக் கொடுக்க முன் வந்ததற்குக் காரணம் அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்ற கருத்துக்கு மாற்றுக் கருத்து வந்து விடக் கூடாது என்பதற்காகவும், அல்லாஹ் அடியார்களுடன் இருக்கின்றான் என்ற சூஃபிஸக் கருத்தை உடைப்பதற்காகவும்தான் என்று நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

சொல்லப்படும் செய்தியில் ஒரு கருத்து மற்றொரு கருத்துடன் மோதுவது போல் தோன்றுகின்ற போது அதற்குரிய விளக்கத்தைக் கொடுத்து அந்தச சந்தேகத்தை நீக்குவது அந்தத் துறையில் ஈடுபடுவோர் மீது கட்டாயக் கடமையாகும்.
இங்கே ஒரு சிலர் அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கின்றான், முதல் வானத்திற்கும் இறங்குகின்றான் என்று அப்படியே விளங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு இரண்டும் முடியும் அல்லவா? என்பது போல் தங்கள் வாதங்களை வைக்கின்றனர்.
இத்தகையோர் இரண்டு அடிப்படை விஷயங்களைப் புரிந்து கொள்ளவில்லை.
முரண்பாடு, அசாத்தியம் என்று எதை ஆக்கி விட்டானோ அந்த விஷயத்தில் அவன் எதுவும் மாற்றம் செய்வதில்லை.
குருடனும், பார்வையுள்ளவனும் இருள்களும், ஒளியும் நிழலும், வெப்பமும் சமமாகாது (அல்குர்ஆன் 35:19-21)
இந்த வசனங்களில் ஒன்றுக்கொன்று எதிரான விஷயங்களைச் சொல்லி இது ஒரு போதும் ஒன்றாகாது என்று கூறுகின்றான். முரண்பாடு என்றால் என்ன என்று விளக்குகிறான்.

அதாவது குருடன் என்றால் குருடன்தான் பார்வையாளன் என்றால் பார்வையாளன்தான். ஒருவன் குருடனாக இருந்து கொண்டே பார்வையாளனாக இருப்பது முரண் என்ற இயற்கை விதியை நமக்குக் கற்றுத் தருகின்றான். அந்த இயற்கை விதியின் படி, தான் ஏகன்ளூ ஒருவன்ளூ தன்னிகரற்றவன் என்பதை நிரூபிக்கிறான். ஒரு பொருள் ஓரிடத்தில் இருந்தால் அது இன்னொரு இடத்தில் இருக்க முடியாது என்பதுதான் அவன் கற்றுத் தரும் இயற்கை விதி.
அந்த இயற்கை விதியின் அடிப்படையில் அவன் அர்ஷில்தான் இருக்கின்றான். அவன் வேறொர் இடத்திற்கு இடம் பெயர்வதில்லை.

அதாவது அவன் நிர்ணயித்த அந்த விதிக்கு அவன் ஒரு போதும் முரண்படுபதில்லை.
எனவே நம்முடைய அறிவின் அடிப்படையில் இல்லாமல், அல்லாஹ் விதித்த இயற்கை விதியின் அடிப்படையில்தான் அவன் அர்ஷிலிருந்து வானத்திற்கு வர முடியாது என்று கூறுகின்றோம். அதாவது அர்ஷில் முதல் வானத்திலும் ஒரே சமயத்தில் இருக்க முடியாது என்று கூறுகிறோம்.
அடுத்து, அவன் அசாத்தியம் என்று எதைக் கூறி விட்டானோ அவன் சக்தியைப் பயன்படுத்தி சாத்தியமாக்குவதில்லை.
நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்ட மாட்டாது. ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சுவர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளைத் தண்டிப்போம்.

(அல்குர்ஆன் 7:40)

இங்கு ஊசிக் காதில் ஒட்டகம் நுழையாது என்று அவன் அசாத்தியமாக்கி விட்டான். அப்படி ஓர் இயற்கை விதியை நிர்ணயித்து விட்டான். அதற்கு அவன் மாறுபட மாட்டான்.
இதைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.
‘இறை மறுப்பாளர் சுவர்க்கம் செல்வார் என்று ஒருவர் சொல்கிறார்’ என்று வைத்துக் கொள்வோம். ‘அல்லாஹ் இன்னின்ன வசனங்களில் இறை மறுப்பாளர்களுக்கு நிரந்தர நரகம் என்றல்லவா சொல்கிறான்!

அவர் எப்படி சுவர்க்கம் செல்ல முடியும்’ என்று நாம் அவரிடம் திருப்பிக் கேட்கிறோம். அதற்கு அவர், ‘ஊசிக் காதில் ஒட்டகம் நுழைகின்ற வரை என்று அல்லாஹ் சொல்கின்றான். அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சக்தி பெற்றவன். எனவே அவன் ஊசியின் காதில் ஒட்டக்தை நுழைய வைத்து இறை மறுப்பாளனை சுவர்க்கத்தில் நுழையச் செய்வான்’ என்று பதில் சொல்கின்றார் என்றால் அதைப் பைத்திக்காரத் தனமான வாதம் என்போம். அதற்கு ஆதாரமாக, அல்லாஹ் அசாத்தியமாக்கியதை சாத்தியமாக்குவதில்லை என்ற நியதியையும் கூறுவோம்.

அல்லாஹ் அர்ஷிலிருந்து கொண்டு முதல் வானத்திற்கு இறங்கும் ஆற்றல் பெற்றவன் என்று கூறுவோருக்கும் இதையே சாம் பதிலாகக் கூறுகிறோம். அவன் முரண்பாடு என்று ஆக்கிய இயற்கை விதியில் அவன் ஒரு போதும் மாற்றம் செய்வதில்லை. உறுதியாக மாற்றம் செய்ய மாட்டான். இது முதல் அடிப்படை.
அடுத்து இந்தக் குர்ஆனை தன்னுடைய வேதம்தான் என்பதற்கு சிறந்த சான்றாக சமர்ப்பிப்பது முரண்பாடின்மையைத்தான்.
அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா?

இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82)
ஒரு நூலில் முரண்பாடு இருந்தால் அது வேதமல்ல என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றான். இது இரண்டாவது அடிப்படை.

இந்த அடிப்படையின் படி அல்லாஹ்வின் வேதத்தில் முரண்பாடுகளுக்கு இடமில்லை. நாம் விளங்குவதில்தான் கோளாறு இருக்க வேண்டும்.
அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்று குர்ஆன்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed